இந்திய சினிமாவில், மாற்று உலகம் மற்றும் AI தொழில் நுட்பத்தில் அசத்தும் முதல் (தமிழ்ப்) படம் ‘வெப்பன்’

மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம் எஸ் மன்சூர் தயாரிக்க, சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை   நடிக்க, இதற்கு முன்பு சவாரி , வெள்ளை ராஜா போன்ற வித்தியாசமான கவனிக்க வைத்த படைப்புகளைக் கொடுத்த குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பன். 

(ஹாலிவுட் நடிகர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் பெட்ரோ பாஸ்கல் இயக்க ஸாக் கிரக்கர் சோஃபமோர் இயக்கும் ஒரு படத்துக்கு சென்ற மாதம் இதே பெயரை வைத்துள்ளனர் .  ஆனால் நம்மவர்கள்தான் முன்னவர்கள்) 

இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு பிரபு ராகவ் . எடிட்டிங் நாஷ், கலை இயக்கம் சுபேந்தர் 

ராஜீவ் மேனனின் இன்ஸ்டிடியூட்டில் கேமரா படித்து விட்டு இயக்குனரானவர்தான் குகன் சென்னியப்பன்.  படத்துக்கு The Hunt Begins என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார் 

சுவாரஸ்யமான விசயங்களை தேடிப பிடித்து பதிவேற்றும் காணொளி பிரபலமாக தான்யா ஹோப் நடித்துள்ளார். அப்படி அவர் கண்டு பிடிக்கும் ஒரு புதிய உலகம்தான் இந்தப் படம் 

தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹியூமன் படம் என்பது மட்டுமல்ல… Artificial Intelligence – AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பிளாஷ்பேக் காட்சி இடம் பெறும் முதல் இந்தியப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது . அந்தக் காட்சிகளில் சத்யராஜும் வசந்த் ரவியும் நடித்துள்ளனர். 

AI தொழில் நுட்பத்தில் சத்யராஜ்

” அந்தக் காட்சிகளுக்காக  ஐந்து டீம்கள் வேலை பார்த்தன . திற மூல மென்பொருள் ஒன்றை (Open Source Software) செயற்கை நுண்ணறிவு இணைப்போடு (AI Plugin) சேர்த்து, முப்பரிமாண உருவங்களை உருவாக்கி அந்தக் காட்சிகளை எடுத்தோம் . Mission Impossible – Dead Reckoning Part One படத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பயன்படுத்தி இருந்தார்கள் . இந்தியாவில் எங்கள் வெப்பன் படம்தான் முதல் படம் .” என்கிறார் தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர் 

தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர்

“சூப்பர் ஹியூமானாக நடிக்கும் சத்யராஜ்க்கு இளம் வயதில் அந்த சக்திகள் எப்படி வந்தது என்பதைக் காட்ட நாங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறோம் சத்யராஜ் சாரை வித்தியாசமான வகையில் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடனேயே பல காட்சிகள் எழுதி இருக்கிறேன் அவரது அமைதிப்படை படத்தின் பெரிய ரசிகன் நான். இந்த வெப்பன் படத்தில் அவரை  வேறு மாதிரியாகப் பார்ப்பீர்கள். அதே போல அவருக்கு இணையான ஒரு கேரக்டரில் வசந்த் ரவி யும் இதுவரை அவரை நீங்கள் பார்க்காத வகையில் படத்தில் வருகிறார் 

வெள்ள ராஜா ஓ டி டி படத்துக்குப் பிறகு நான் வேறொரு ஸ்கிரிப்ட் எழுதினேன் . ஆனால் அதன் பட்ஜெட் ரொம்பப் பெரிதாக இருந்தது . காரணம் அதில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் வேலைகள் . அடுத்து அதை செய்யலாம். இப்போது வேறு படம் பண்ணலாம்  என்று எழுதிய கதைதான் வெப்பன். தயாரிப்பாளர் மன்சூர் சார்  கதை கேட்டு உடனே தயாரிக்க ஒத்துக் கொண்டார் 

இந்தப் படத்தில் ஒரு புது உலகை – மாற்று உலகமாக சித்தரிக்கிறோம் . படத்தில் சில அதிரவைக்கும் சண்டைக் காட்சிகளைப் பார்ப்பீர்கள் “என்கிறார் குகன் சென்னியப்பன் 

வசந்த் ரவியுடன் குகன் சென்னியப்பன்

ஒப்பன்ஹெய்மர் படத்தை இப்போது கொடுத்து இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் , ” செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை வளர்ப்பது அணுகுண்டை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லி இருக்கிறார் .

என் கருத்தும் அதுதான் என்கிறார் குகன் சென்னியப்பன். “படங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவில் போராட்டம் நடப்பது நியாயம்தான்” என்கிறார் 

ராஜீவ் மேனனுடன் குகன் சென்னியப்பன்

படத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மனித வடிவிலான ஆயுதமாகவே சத்யராஜ் நடிக்கிறார் . அதன் பயன்பாட்டில் பங்கெடுக்கும் கதாபாத்திரத்தில் வசந்த் ரவி நடிக்கிறார் 

மணிரத்னம் அழைத்தபோது எல்லாம் நடிக்க மறுத்து , விடுதலை படத்தில் கலெக்டராக நடித்த ராஜீவ் மேனன் “ஒரு விஷயத்தை உருவாக்குறதுதான் கஷ்டம் .அழிக்கிறது ரொம்ப ஈஸி” என்று வசனம் பேசி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 

வாகமன் பகுதியில் ஒரு புதிய சூழலை படத்தின் கதையில் உருவாக்கி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன் . 

முத்தாய்ப்பாக படத்தின் தயாரிப்பளர் மன்சூர் ,

தயாரிப்பாளர் எம் எஸ் மன்சூர்

“இது முதல் பாகம்தான். அடுத்தடுத்து பல பாகங்கள் உருவாக இருக்கிறது . அதிக கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பட்ஜெட் காரனம குகன் எழுதி, தள்ளி வைத்திருக்கும் அந்த முதல் கதையையும் படமாக எடுப்போம்”என்றார். ‘

வாழ்த்துகள்  ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *