மும்பையில் ஷமிதாப் படத்தின் விழாவில் இளையராஜா கலந்து கொண்டு ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்த சாதனைக்காக பாராட்டப்பட்டது தெரிந்த விஷயம்தான்.
அதைத் தொடர்ந்து ஷமிதாப் படக் குழுவினர் சென்னையில் மீடியாக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி சத்யபாமா பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
நிகழ்ச்சியில் நாயகன் தனுஷ் மற்றும் நாயகி அக்ஷரா ஹாசன் உட்பட பலரும் கலந்து கொண்டும், படம் சம்மந்தப்பட்ட முக்கியமானசீனியர் நபர்களான இசைஞானி இளையராஜா மற்றும் அமிதாப் இருவரும் கலந்து கொள்ளவில்லை .
காரணம் …
இந்த சந்திப்பு பற்றிய அழைப்பில் இளையராஜா பெயரையே விட்டு விட்டார்கள். அது எல்லோருக்கும் போன பிறகு, யாரோ சுட்டிக்காட்ட, அப்புறம் அவரது பெயர் சேர்க்கப்பட்டதாம்.
”படத்தின் இசையமைப்பாளரான நமது பெயரையே மறந்து விடும் அளவுக்கு நமக்கு ‘முக்கியத்துவம் கொடுக்கும் ‘ நிகழ்ச்சிக்கு நாம் ஏன் போக வேண்டும்?” என்று, மிக நியாயமாக முடிவெடுத்த இளையராஜா நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்து விட்டாராம்.
அமிதாப் கதையே வேறு.
சரியான திட்டமிடல் இல்லாமல் அவரை சென்னைக்கு கொண்டு வந்து பெரிதாக எரிச்சல்படுத்தி இருக்கிறார்கள்.
தவிர படம் சம்மந்தப்பட்ட சென்னை நபர் ஒருவரே , ”ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கு மட்டும் பேட்டி கொடுத்தால் போதும் . தமிழ் பத்திரிக்கைகள் தேவை இல்லை ‘ என்று குட்டையைக் குழப்பி இருக்கிறார் .
ஒரு பத்திரிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு அமிதாப்பின் பேட்டியை வாங்கித் தந்த அந்த நபர் , அதே பத்திரிக்கையின் தமிழ்ப் பதிப்புக்கு அமிதாப் பேட்டி கொடுக்காமல் பார்த்துக் கொண்டதுதான் அதிசயம் .
விளைவு?
முன்னரே திட்டமிட்டபடி அஞ்சு மணிக்கு பிளைட்டுக்கு போயாக வேண்டும் என்பதில் ஸ்ட்ராங்காக நின்று அப்படியே கிளம்பிப் போய் விட்டார் அமிதாப் .
இப்படியாக பெருந்தலைகள் இருவரும் இல்லாமலே நடந்தது, ஷமிதாப் படத்துக்கான சென்னை மீடியா சந்திப்பு .
Comments are closed.