எம் ஜி ஆர் , சிவாஜி , ஜெமினி பட இயக்குனர் பேரன் இயக்கும் ” யார் இவன்”

yaar 3

வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், 

டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.

சத்யாவின் தாத்தா டி. பிரகாஷ் ராவ் ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் .

சத்யாவின் அப்பா டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .

yaar 2

வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் ? தமிழில் இது இவருக்கு முதல் படம்.

படம் பற்றிக் கூறும்  இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .

கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .  ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,

மணந்து  கொள்கிறார் . ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .

yaar 6

ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் .  ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்

மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான திரில் படம் போல இருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் மனோவியல் முறையில் படத்தை கொண்டு போகிறோம் .

 இது ஒரு மைன்ட் கேம் படமாக அதாவது மூளை விளையாட்டுப் படமாக இருக்கும்  வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .

yaar 4

படத்தின் எல்லாப் பாடல்களையும் மறைந்த நா . முத்துக் குமார் எழுதி இருக்கிறார் அவர் கடைசியாக பாடல் எழுதிய படம் இதுதான் என்று நினைக்கிறேன் .

இசை  தமன் . சூர்யா நடித்த 24 படத்துக்கு படத் தொகுப்பு செய்த புடி பிரவீன் படத் தொகுப்பு செய்கிறார் ” என்கிறார்

தாத்தா டி. பிரகாஷ் ராவ் பற்றிப் பேச்சு வந்தபோது ” எம் ஜி ஆர் நடித்த படகோட்டி படம் கிளாசிகல் கமர்ஷியல் . எம் ஜி ஆர் முதல்வர் ஆன உடம் தாத்தாவுடன் ஒரு முறை போய் அவரை சந்தித்துள்ளேன் .

 சிவாஜி சார் நடித்த உத்தம புத்திரன் பற்றி சொல்லவே வேண்டாம் . அது ஒரு காவியம்.

yaar 7

கமல் சார் நடித்த வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தில் நான் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றினேன் . அப்போது கமல் சாரிடம் தாத்தா பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்ட போது, 

கமல் சார் ரொம்ப சந்தோஷப் பட்டார் .

ஆனால் இதற்கெல்லாம் முன்பாக சிறு வயதில் சென்னை தி நகர் விஜயராகவா தெருவில் உள்ள எங்கள் வீட்டுக்கு மேற் சொன்ன சாதனையாளர்கள் உட்பட வராத ஹீரோக்களே  கிடையாது .

அதெல்லாம் மறக்க முடியாத பொற்காலம்.

yaar 5

தாத்தா மற்றும் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் எனக்கு இருக்கிறது. ” என்றார்

யார் இவன் என்ற கேள்விக்கு டி.பிரகாஷ்ராஜின் பேரன் என்ற கெத்தான பதில் கிடைக்க வாழ்த்துகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *