ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் …ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஒ டி டி யில்  ரிலீஸ்…

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ்  தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக  கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி நடிக்க, இவர்களோடு சாம்ஸ் உள்ளிட்ட பலர்  நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  ஜூபின்  இசை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில்.உதவி இயக்குனராக பணியாற்றியவர். 
 
யோக்கியன் படம் முதன்.முறையாக ஒரே நேரத்தில் ஜூலை 28ம் தேதி தியேட்டர் மற்றும்   A  கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App )ஒ டி டி தளத்தில்  ரிலீஸ் ஆகிறது. 
 
இது பற்றி  ஜெய் ஆகாஷ் பேசியபோது, “ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது. என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக நான் மட்டுமல்ல பட குழுவினர் அனைவரும்.கடினமாக  உழைத்திருக்கிறார்கள்.. 
 
எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை. ஆனால் இப்போது  தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய  பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை.அவர்களை குற்றம்  சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான்  ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். 
 
இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை. ஏ கியூப ஆப்பை ஆண்ட்ராய்டு ஃபோனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும்,  ஆப்பிள் ஃபோனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக  டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
 
அதில் படத்தின் டிரெய்லர் வரும் . அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும். வசதியான நேரத்தில். உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.
 
A கியூப் ஆப்பிள் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள்.  இதனால் படத்தின். மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பிள் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது.படம் எடுத்துவிட்டு  தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில்  வெளியிடலாம். அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப்படும் அத்துடன் 80 சதவீதம் வருமான அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும்.
 
சினிமாவில் நான் நடித்து பெற்ற பெயரை விட  ஜீ தமிழ் டிவியில் நீ தானே என் பொன் வசந்தம் என்ற டி வி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிட்டேன். அதனால் அவ்வளவு ரசிகர்களும் என் படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.
 
ஜூலை 28ம் தேதி தியேட்டரிலும் யோக்கியன் ரிலீஸ் ஆகிறது. குறைந்தளவு தியேட்டரில்தான் படம் வெளியாகிறது தியேட்டரில் படத்தை பார்க்க  முடியாவிட்டால் ஏ கியூப் மூவிஸ் ஆப்பிள் யோக்கியன் படத்தை பார்த்து ரசியுங்கள்  
 
கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகியுள்ளது.  அத்துடன் நல்ல பாடல், இசை, காட்சிகள் என கமர்ஷியல் அம்சங்களுடன் படம் வந்திருக்கிறது. நல்லவன் கெட்டவன் ரோல்களில்  ஹீரோக்கள் நடிக்கின்றனர்.  அப்படியொரு முயற்சியாகவே நான் இதில் நடித்திருக்கிறேன். ஹீரோவாக மட்டுமல்லாமல்  வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இதில் காணலாம். அனைவரும் ஆதரவு தாருங்கள் “என்றார் 
 
இயக்குனர் சாய் பிரபா மீனா பேசும்போது, யோக்கியன் கதையை ஜெய் ஆகாஷ்  எழுதி உள்ளார். திரைக்கதை அமைத்து நான்  இயக்கி உள்ளேன். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் ஏ கியூப் ஆப்பில் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *