ரசிகர்களின் யூகத்தில் எப்படி இருப்பான் இந்த யூகன் ? பார்க்கலாம் .
ஒரு ஐ டி நிறுவனத்தில் பணி புரியும் நண்பர்கள் சிலர் . ஒவ்வொருவரும் வசதியான பெரிய அபார்ட்மென்ட்களில் தனித்தனியாக வசிக்கிறார்கள் . ஒரு பெண் பேய் அவர்களில் இரண்டு பேரை அடுத்தடுத்து கொல்கிறது .
வழக்கை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் நண்பர்களையே சந்தேகப்படுகிறார் . அதிலும் ஒருவனை அதிகமாகவே சந்தேகப்படுகிறார் . ஒரு நிலையில் அவர்களுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் மோதலாகி, எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்து உதைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.
விசாரணையில் அதே நண்பர்கள் , அங்கே நன்றாக வேலை செய்து நல்ல பெயர் வாங்கும் ஒரு பெண் , அவர்களில் ஒருவனுக்கு அவளோடு ஏற்படும் காதல், அவளது பதவி உயர்வு காரணமாக மற்ற நண்பர்களுக்கு அவள் மேல் ஏற்படும் பொறாமை , அவளை கம்பெனிக்கு துரோகியாக காட்டுவது , அவளது தற்கொலை என்று கதை போகிறது .
நண்பர்களைக் கொல்வது பேய்தான் என்பது உண்மையா? பொய்யா? அல்லது இரண்டும் கலந்த விசயமா? என்பதே இந்தப் படம் !
வெகு இயல்பாக படம் எடுத்து இருக்கிறார்கள் . கேஷுவலாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
படத்தில் சவுண்டு எபெக்ட்ஸ் அசத்தி இருக்கிறார்கள் .
ரஷாந்த் அர்வினின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது .
லெஃப்ட், ரைட், லுக் விசயங்களில் கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு இதமாகவும் கதையின் மூடுக்கு ஏற்றபடியும் இருக்கிறது
இன்ஸ்பெக்டராக நடித்து இருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
காதலனாக நடித்திருக்கும் யஷ்மித்தும் சிறப்பு .