”ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மைல்கல்தான் “- ‘ஜப்பான்’ கார்த்தி

ஜப்பான் படம் தொடர்பாக சுவையான கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் கார்த்தி  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது, உங்களுக்கும் முதலில் கதை கேட்கும்போது அப்படித்தான் இருந்ததா? ஆம். ஆனால் அப்போது ஜப்பான் என்று பெயர் வைக்கவில்லை.  இப்படி ஒருவனை சமுதாயம் உருவாக்கி இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. அவன் என்ன செய்வான், என்ன பேசுவான் என்று சொல்லவே முடியாது. இப்படி ஒரு கதாபாத்திரம் வரும்போது இதில் நான் எப்படி நடிக்க முடியும், பொருந்த முடியும் என்று தான் தோன்றியது. அதனால் தான் நடை உடை பாவனை என எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வித்தியாசமாக சில விஷயங்கள் தேவைப்பட்டன. அந்தத் தேடலில் கிடைத்தது தான் இந்தத் தோற்றம், குரல் மாற்றம் எல்லாம். பருத்திவீரனிலிருந்து ஜப்பான் வரை உங்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. ஜப்பானில் என்ன ஸ்பெஷல்? நீண்ட பயணம் என்பதோடு சேர்த்து மிகவும் கவனமான …

Read More