
புதிய சயின்டிஃபிக் திரில்லர் ‘நகல்’
S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி கதாநாயகனாகவும் மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும், நடிக்க இருக்கும் ‘நகல்’ படம் , இன்று காலை பூஜையுடன் மங்களகரமாகத் துவங்கியது. இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் பல படங்கள் வருகின்றன . அதில் மிகவும் விறுவிறுப்பான சயிண்டிபிக்திரில்லர் படமாக உருவாகவுள்ளது “நகல்” திரைப்படம்.நாயகி முன்னரே பல குறும்படங்களில் நடித்துள்ளார் சதுர்த்தி ஐயப்பன் என்பவரின் கதை திரைக்கதையில், F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு சண்டைப் பயிற்சி ஸ்டன்ட் சிவா. …
Read More