நாகார்ஜுனா , ஸௌரப் ஜெயின், அனுஷ்கா , , பிரயகா ஜெய்ஸ்வால் , ஜெகபதி பாபு, சம்பத் நடிப்பில் கே ராகவேந்திர ராவ் இயக்கத்தில்,
தெலுங்கில் வந்த ஓம் நமோ வெங்கடேசா படத்தை மொழிமாற்றம் செய்து ,
ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ் துரை முருகன் , மற்றும் பி. நாகராஜன் இருவரும் தமிழில் வெளியிட்டு இருக்கும் படமே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் . திருப்பதி வெங்கடேசப் பெருமானின் உண்மை பக்தராக இருந்து பாலாஜி என்ற பெயரையும் கொடுத்து, பின்னர் திருமலையிலேயே ஜீவ சமாதி அடைந்த ராமா என்ற பக்தரின் வரலாறுதான் இந்தப் படம் .
‘பெருமாளை நேரில் கண்டவர்…. பெருமாள் அவரோடு அடிக்கடி நேரில் தாயம் ஆடுவார் .. ராமா ஜீவ சமாதி அடைந்த போது அவருக்கு மண் அள்ளிப் போட்டதே பெருமாள்தான்’ என்பது புராணம் .
அதை இன்றைய தொழில் நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தி பக்திப் படமாகவும் ரசனையாகவும் எடுத்து எடுத்து இருக்கிறார்கள்.
பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு … திருமலை உருவான விதம்… ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம் .. திருமலையில் முதலில் யாரை வணங்குவது ?
– என, பல கேள்விகளுக்கான விளக்கங்களை இப்படத்தில் தெளிவான காட்சிகளாக அமைத்துள்ளது சிறப்பு .
அட்டகாசமாக படமாக்கல் செய்து இயக்கி இருக்கிறார், தெலுங்கில் நூறுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே ராகவேந்திர ராவ் .. . பிரம்மாண்டம் மற்றும் பிரம்மாதம்.!
அஞ்சு படம் எடுத்தாலே அசந்து விடும் இயக்குனர்கள் இந்தப் படத்தில் ராகவேந்திர ராவ் காட்டி இருக்கும் எனர்ஜியில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
மிக சிறப்பான ஒளிப்பதிவில் மயக்குகிறார் கோபால் ரெட்டி .
அரங்க அமைப்புகள் கலை இயக்கம் , உடைகள் , மேக்கப் , கணிப் பொறி வரைகலை வேலைகள் எல்லாம் சும்மா அள்ளுகின்றன . கண்ணில் ஒத்திக் கொண்டு தீராது . ஆகா ! அற்புதம் !கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை . எஸ் பி பி குரலில் மிக சிறப்பாக பாடி உருக வைக்கிறார் அவரது மகன் எஸ் பி பி சரண்.
நல்ல தமிழில் டி எஸ் பாலகன் எழுதியுள்ள வசனமும் பாடல்களும் மிக சிறப்பு .
ராமாவாக அதி அற்புதமாக நடித்துள்ளார் நாகர்ஜுனா . கிரேட் நாகா . மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்
நம்ம சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, மாபெரும் தெய்வத் தமிழ்ப் புலவர் ஆண்டாள் கேரக்டரை அப்படியே காப்பி அடித்து கிருஷ்ணம்மா என்ற கேரக்டரை உருவாக்கி ,
அது போதாது என்று அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுஷ்காவுக்கு ஆண்டாள் தோற்றத்தையும் கொடுத்து இருக்கிறார் ராகவேந்திர ராவ் .
இங்கே உண்மையான ஆண்டாள் பக்தன் எவனும் இல்லை .
அண்ணாநகர் ஆண்டாளையும் அயனாவரம் கோவாலையும் ஐ சி எப் இல் தண்டால் எடுக்க விட்டதோடு சரி . அம்புட்டுதான் நம்ம ஆட்கள் .
பக்தன் என்று சொல்லிக் கொள்கிறவன்களாவது அதுக்கு முயற்சி எடுக்கிறானா என்றால் அதுவும் இல்லை
சுய விளம்பரம் வாங்கிக்கொள்ள சோடா பாட்டில் வீசுவேன் என்கிறான். இல்லனா தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டு அஜீரணம் வரும்போது உண்ணாவிரதம் இருக்கேன்னு ஊரை ஏமாத்துறான் . தூத்தேறி..
இப்படியே வெட்டி நியாயம் பேசிட்டு இருங்க .
தமிழினத்தின் வரலாற்றில் உண்மையாக நடந்த எல்லா விசயங்களையும் தெலுங்குக்காரன் காப்பி அடிச்சு அவன் படத்துல வச்சு எல்லாம் அவன் வரலாறுன்னு சொல்லிக்கப் போறான் .
அனுஷ்காவை சாமியாரிணி ஆக்கி விட்டாலும் ஒரு அரசனின் பார்வையில் கனவில் சரசம் ஆட விட்டு கலர் கலர் ஆக கப்பி அடித்து ஜென்ம சாபல்யம் தேடிக் கொள்கிறார் ராகவேந்திரராவ் . மீரு பெத்த கில்லாடி அண்ணாகாரு !
மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்த ஸௌரப் ஜெயின் பெருமாளாக மிக சிறப்பாக நடித்துள்ளார் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462