தீபாவளிக்கு திரையில், பிரதீப் ரங்கநாதனின் DUDE

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ,சரத்குமார் நடிப்பில்,  அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கும் படம் ட்யூட் ( DUDE) 

2018 ஆம் ஆண்டில் இதே பெயரில் அமெரிக்க காமெடி படம் ஒன்று  கென்டால் மேக்கனோன் உடன்   சேர்ந்து கதை எழுதி ஒலிவியா மில்ச் என்ற பெண் திரைக்கதை எழுதி இயக்க,  லூஸி ஹேல், கேத்ரின் பிரஸ்காட் , அலெக்சாண்ட்ரா ஷிப், அவ்க்வாஃபினா, ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடிக்க, , அலெக்ஸ் வுல்ஃப் என்பவர் நாயகனாக நடித்து வெளிவந்து ,

இப்போது நெட் பிளிக்சில் காணக் கிடைக்கும் படம். நாலு பள்ளி மாணவிகள் ஒரு மாணவனுக்கு இடையேயான நட்பு, சண்டை, இழப்பு, தெளிதல் இவற்றை சொல்லும் படம் ) 

தமிழ் படம் ட்யூட் அறிவிக்கப்பட்ட உடனே,  தெலுங்கு நடிகர் தேஜா , கால் பந்தை மையமாக வைத்து தான் எடுக்க இருக்கும் படத்துக்கு இதே பெயரை முன்பே பதிவு செய்து இருப்பதாகவும் , இரண்டு ட்யூட் படங்களுமே பல மொழிகளில் வரும் என்பதால் குழப்பம்  இருக்கும் என்று கூறினார் .

பின்னால் அந்த பிரச்னை முடிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியவில்லை. பற்றியும் ஏரியலாம் அணைந்தும் போகலாம் . 

தமிழ் ட்யூட் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் படம் பற்றி  பத்திரிகையாளர்களுடன் பேசினார் இயக்குனர் கீர்த்தீஸ்வரன். 

“நான் சுதா கொங்காரவிடம் உதவி இயக்குனராகப் பல படங்கள் பணியாற்றினேன். ஐந்து வருடத்துக்கு டைரக்டர் ஆகி விட வேண்டும் என்று நினைத்தேன் . ஆனால் ஏழு வருடங்கள் ஆகி விட்டது.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கும் நிகேத் பொம்மி தான் என்னை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு அழைத்துப் போனார் அவர்களிடம் கதை சொன்னேன் . அவர்கள் உடனே ஒகே சொல்லி வேலைகளை ஆரம்பித்தார்கள் . 

உண்மையில் இந்தக் கதையை நான் முப்பது வயது ரஜினியை மனதில் வைத்து எழுதினேன். இன்றைய சூழலில் அது பிரதீப் ரங்கநாதனுக்கு பொருத்தமாக இருந்தது . கதையை கேட்ட அவர் மூணு நாள் டைம் கேட்டார். அப்புறம் சம்மதம் சொன்னார் . 

பிரேமலு  படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நான் மமிதாவை இந்தப் படத்துக்கு புக் செய்து விட்டேன் . அவர் வந்த பிறகு இந்தப் படம் இளவயது ரஜினி – ஸ்ரீதேவி நடித்த படம் போல வந்திருக்கிறது . 

சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார் . 

எனக்கு இந்தப்படம் கிடைக்க காரணமன ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோர் சிறப்பான பங்களைபைக் கொடுத்து இருக்கிறார்கள் . 

வெளிநாட்டுக்கு ஷூட்டிங் போகலையா என்று பலரும் கேட்கிறார்கள் . எனக்கு அதை விட இந்தப் படத்த்துக்கு சென்னை பெரிதாகப் படுகிறது . எனவே சென்னையை விதம் விதமாக காட்சிப் படுத்தி இருக்கிறேன் . ‘முதல் படத்தில் மவுன்ட் ரோட்டில் கேமரா வைத்து ஷூட் செய்ய வேண்டும் ‘ என்று ஆசைப்பட்டேன். அதைச் செய்தேன் . இப்படி பல ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன் .

இந்தப் படம் மாடர்ன் ஆக சுவாரஸ்யமாக   இன்றைய இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் இருக்கும் அதே நேரம் செண்டிமெண்ட் , சமூகப் பொறுப்பு இவற்றோடும் இருக்கும் . 

படத்தில் தாலி செண்டிமெண்ட் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இல்லாமல் வேறு மாதிரி இருக்கும். ” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *