Dakdam Motion Pictures சார்பில் அனிஷ் மாசிலாமணி தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, மைம் கோபி, KPY தீனா, ராமச்சந்திரன் துரைராஜ், கலையரசன் , சித்திரசேனன், சித்து குமரேசன் நடிப்பில் ஹரி வெங்கடேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் ஃப்ரை டே .
ஒரு கோஷ்டி மோதலில் கத்தி குத்தில் சிக்கிய இளைஞனை (KPY தீனா) காப்பாற்றுகிறான் மணி (அனிஷ் மாசிலாமணி) . டாக்டரை வர வர வைத்து சிகிச்சையும் அளிக்கிறான் . ஆனால் மணியைக் கொல்ல அந்த இடத்துக்கு ஆட்களை வராகி சொல்கிறான் தீனா,
அவர்கள் வரும் வரை நேரத்தைக் கடத்த, மணியின் தம்பி பற்றி மணியிடம் விசாரிக்கும் தீனா, அந்தத் தம்பி கொல்லப்பட்டது எப்படி என்று .தீனா கேட்க தம்பி கொல்லப்பட்ட கதையை மணி சொல்கிறான்.
ரவுடித்தனம் அரசியல் இரண்டும் செய்யும் ஒருவனிடம் (மைம் கோபி) மணி உள்ளிட்ட அனைவரும் அடியாட்கள். . அரசியல்வாதிக்கு வரவேண்டிய வேட்பாளர் வாய்ப்பை தட்டிப் பார்க்கிறான் இன்னொரு அரசியல்வாதி. எனவே அவனை கொலை செய்ய திட்டமிடுகிறான் ரவுடி அரசியல்வாதி .அது மணிக்கு சரியாகப்படவில்லை . எனவே அவனை கொல்லப் போகும் குழுவில் மணி இடம்பெறவில்லை. மணி தன் தம்பியை ரவுடித்தனம் இல்லாமல் வெளிநாட்டுக்கு வேளைக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறான். ஆனால் மணிக்கு தெரியாமல் அந்த குழுவில் மணியின் தமபியும் இருக்கிறான்.
கொல்ல ப்பட இருக்கும் அரசியல்வாதி தனக்கு வேண்டிய ஒருவனையே கொன்று விட்டு அவன் மனைவியை தனதாக்கிக் கொள்கிறான். எனவே அவள் வீட்டுக்கு அவன் போகும்போது கொலை செய்ய திட்டமிடப்படுகிறது. அவன் கொல்லப்படுவதோடு அந்த வீட்டில் இருப்பவளும் கொல்லப்படுகிறாள்.
அங்கே பதிலுக்கு மணியின் தம்பியும் கொல்லப்படுகிறான் .
இதை மணி சொல்லி முடிக்க, தீனா வரச் சொன்ன ஆட்கள் வந்து மணியை தாக்குகிறார்கள். அவர்களை மணி அடித்துத் துவைக்க, அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து தன்னைக் கொல்ல வந்த மணியையே சுடுகிறான் .
தன்னைக் காப்பாற்றிய மணியை தீனா கொல்ல முயல்வது ஏன்? மணியின் தம்பியைக் கொன்றது யார்? மணி கொல்லப்பட்டானா ? தீனாவின் முடிவு என்ன என்பதே படம்.
கடற்கரை அங்கிருந்து ஒரு கேங் மோதல் என்று அழுத்தமாக பூடகமாக ஆரம்பிக்கிறது படம். காட்ச்சிகளின் பின்புலம் நன்றாக இருக்கிறது. ஜானி நாஷின் ஒளிப்பதிவும் ஹரி வெங்கடேஷின் ஷாட் ஸ்டைலும் பிரவீன் படத்தொகுப்பும் அருமை . டுமே வின் இசை ஜஸ்ட் ஓகே.
எல்லோருக்கும் தெரிந்த என்ன நடக்கும் என்று புரிகிற கதையை நாங்க எப்படி சொல்றோம் பாத்தீங்களா என்று மானசீகமாக கேட்டபடி சொல்கிறார்கள்.
எடுத்துக் கொண்ட காட்சியை எல் கே ஜி பையன் பாணியில் சொல்கிறார்கள். அதில் சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை.
இந்தப் படத்துக்கு ஏன் ஃப்ரை டே என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமை தானே ரிலீஸ் ஆகும். அதனால் இருக்கலாம் .
படம் முடியும்போது, சரி இப்ப அதுக்கு என்ன? என்று கேட்கத் தோணுது
மொத்தத்தில் .. ஃப்ரை டே கருகும் அளவுக்கு செய்யப்பட டீப் ஃப்ரை டே !
