லீடர் @ விமர்சனம்

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால் , பாகுபலி பிரபாகர்,அம்ரிதா ஐயர், வி டி வி கணேஷ் நடிப்பில் ஆர் எஸ் துரை செந்தில் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம். 
 
தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மாபெரும் தாதா (பாகுபலி பிரபாகர்) ஒருவனின்  கார்களை ரிப்பேர் செய்யும் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கும் நபரிடம் (வி டி வி கணேஷ்) மெக்கானிக்காக வேலை செய்பவர் சக்திவேல் (சரவணன்) . ஓனருக்கு சொந்தமான  வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சரவணனுக்கு ஒரு மகள் (இயல்) . மனைவி இல்லை. 
 
ஒரு பெரிய கடத்தல் கும்பலின் தலைவன் ( சந்தோஷ் பிரதாப்) ஒரு ஆபத்தான வெடிமருந்துக்கான மூலப் பொருளை தூத்துக்குடி  துறைமுகத்தின் வழியே கடத்த முயல்கிறான். அதைப் பற்றி  தகவல் அறிந்த பெண் போலீஸ் அதிகாரி (ஆண்டிரியா),   ஹார்பருக்குள் இயல்பாகப் போய்வரும் சக்திவேல் மூலம்  உண்மையை வெளிக்கொண்டு வர முயல்கிறாள். சக்திவேலின் மகளைக் கடத்தி பெண் போலீஸ் அதிகாரி அதை சாதிக்க, ஒரு நிலையில் தெரிகிறது,  இது சக்திவேல் சிக்கிய வலை அல்ல; சக்திவேல் விரித்த வலை என்பது. 
 
அது என்ன வலை? நடந்தது என்ன என்பது படம். 
 
பிரம்மாண்டமான செலவில் சிறப்பான படமாக்கலில் கமர்ஷியல் அதிரடிப் படமாக இயக்கி இருக்கிறார் துரை செந்தில்குமார். அவரது உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. 
 
அப்பா மகள் சென்டிமென்ட், அடுத்து அடுத்து   திருப்பங்கள் என்று  படம் போகிறது. சுட வாய்ப்பு இருந்தும் சுடாத ஒருவன் , சுட விரும்பாத சூழலில் சுடுவது போன்ற சூழல் உருவாக்கங்கள் அருமை .
 
 கண்டெய்னர் சேசிங் எடுக்கப்பட்டு இருக்கும் விதம் பிரமாண்டம். , தூத்துக்குடி துறைமுகம் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விதம் ,வந்தே பாரத் ரயில் சண்டை ஆகியவை அசத்துகின்றன. 
 
வெங்கடேஷ் ஒளிப்பதிவு  படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜிப்ரானின் இசை பரபரப்பைக் கூட்டுகிறது. பிரதீப் ஈ ராகவின்  படத் தொகுப்பு ஆக்ஷன்  காட்சிகள் உட்பட அனைத்து காட்சிகளிலும்  ஜொலிக்கிறது. துரைராஜின் கலை இயக்கம் , சதீஷ்குமாரின் ஒலி வடிவமைப்பு ஆகியவையும் சிறப்பு. 
 
ஹீரோயிசத்தோடு  நடிப்பில் முன்னேறி இருக்கிறார் சரவணன். அவரை மிக சரியாக பயன்படுத்தி இருக்கிறார் துரை செந்தில்குமார். 
 
ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத். சந்தோஷ் பிரதாப் அனைவரும் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளனர் . 
 
கடைசி நேரத்தில் சில விஷயங்களை அவசர அவசரமாக சொல்லி இருக்கிறார்கள் வெகுஜன ரசிகனுக்கு குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். 
 
எனினும் போரடிக்காத ஆக்ஷன் சென்டிமன்ட் மசாலா  படம்.
 
மொத்தத்தில் லீடர் … தி நகர் பனகல் பார்க் லெஜன்ட் சரவணா ஸ்டோர்  கேண்டீன்..  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *