மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் கதையை வைத்து கில்லர் சூப் என்ற இணையத் தொடரை இயக்கி இருக்கிறார் அபிஷேக் சௌபே . இவர் இதற்கு முன்பு ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கியவர்
சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது.
நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், ” எனது கேரியரில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இரு கதாபாத்திரத்திலும் முற்றிலும் மாறுபட்டு நடிக்கிறேன். “.
கொங்கனா சென்ஷர்மா கூறும்போது, “ நான் நடித்திருக்கும் சுவாதி ஷெட்டி என்ற கதாபாத்திரம் ஆழம், இருள் மற்றும் நிறைய பஞ்ச்களைக் கொண்டுள்ளது.தூங்கும் நகரத்தின் பின்னணியில் நாங்கள் உருவாக்கிய நகைச்சுவையான உலகத்தைப் பற்றிய படம் இது ” என்றார்.