அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான தமிழர் டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார்
“டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற அவரது முதல் ஹாலிவுட் திரைப் படத்தில் நடிகர் நெப்போலியன் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார் .
எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல்,
தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்,
மத்திய அரசின் சமூகநீதி துறை இணையமைச்சராகவும் உயர்ந்து சாதனை புரிந்திருக்கிற நெப்போலியன்
இத்திரைப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற ஒரு முக்கியமான வேடமேற்றிருக்கிறார் இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.
குற்றப்பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது.
இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார்.
ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார்.
இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்தும் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.