புதுமையான முறை டிக்கட் விற்பனையில் ‘கூத்தன்’
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைக்கதைத் திலகம் கே. பாக்யராஜ் , ஜாக்குவார் தங்கம் , நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புது விதமான டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன்.“ஒரு மிகப் பெரும் பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர நினைத்து இந்தப்படம் தயாரித்துள்ளேன். எந்த விசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது சிரமமான விசயமாகிவிட்டது. …
Read More