அர்ஜுன் தாசின் ரொமான்ஸ் காட்சிகள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, …

Read More

மகாமுனி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு  நடிப்பில்  மவுன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி இருக்கும் படம் ‘மகாமுனி’ .  கிராமப் புறத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் …

Read More

‘மவுன குரு’ சாந்தகுமாரின் ‘மகாமுனி’

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா,  இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா,  நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா,   இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக்  கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.  நிகழ்ச்சியில்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,“2010ல்  மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை  மூன்றாவது வாரத்தில்தான்  பார்த்தேன்.  அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக்   கண்டு  நான் பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன்.  இந்த மாதிரி ஒரு படத்தை  எடுப்பதற்கான  எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன்  வேலை செய்யவிருப்பப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத்  துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக்  குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் இரண்டு  பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர்  கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர்.  நான் இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.  44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.  …

Read More