டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் @ விமர்சனம்

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் சார்பில் ஷோபா  எர்லகட்டா , பிரசாத் தேவினேனி, எஸ் எஸ் கார்த்திகேயா ஆகியோர்  தயாரிக்க,பகத் பாசில், சாரா பலேகர், மகேஷ் மஞ்ச்ரேக்கர் , சவுரப் சச்தேவா , வெங்கடேஷ் காக்கமுனு, சுப்பாராஜு , திவ்யா பிள்ளை நடிப்பில் ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கி தெலுங்கில் வந்திருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம். 

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரி ( பகத் பாசில்)  இன்னொரு பக்கம் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன். ஆட்டுக்கிடா சண்டை பந்தயத்தில் இவனால் ஏமாற்றப்பட்ட ஒருவன் தனது பணத்தைக் கேட்டு இவனை விரட்டுகிறான். அப்போது ஒரு சிறுமி (சாரா பலேக்கர்) இவனிடம் வந்து சேர்கிறாள், கூடவே ஒரு நாய்க்குட்டி. 
 
இவனை மேஜிக் மேன் என்று நம்பும் அவள், தானும் மேஜிக் செய்வேன் என்றும் ஒரு மேஜிக் செய்து அப்பா அம்மாவை மறைய வைத்து விட்டதாகவும் வீட்டுக்கு கொண்டு போய் விடு என்று அட்ரசும் சொல்கிறாள்.
 
இவள் அப்பா அம்மாவிடம் பணம் கேட்டு மிரட்டி பணத்தை வாங்கிக்  கொண்டு இவளை அனுப்பி விட்டு அந்த பணத்தை வைத்து கடன் அடைத்து விடலாம் என்று எண்ணுகிறான். 
 
தனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அப்படி சிறுமியை ஒப்படைத்து பணம் பெரும் அவனது முயற்சி எல்லாம் அந்த நாயாலும் சிறுமியாலுமே கெட்டப் போகிறது. 
 
ஒரு நிலையில் அந்த சிறுமிக்கு பெரும் சக்தி இருப்பது அவனுக்கு தெரிய வருகிறது. அவள் செத்துப் போனவள் என்பதும் அவள் இவன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறாள் என்பதும் . அவள் கோவிலுக்குள் கூட நுழைவாள் என்பதும் தெரிய வருகிறது . 
 
சிறுமி இறந்த காரணம் அறிய அவன் விரும்பும்போது.சிறுமியின் மாமா ( சவுரப் சச்தேவா )  அவருக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி (சுப்பாராஜு) ஆகியோர் வசம் சிக்குகிறான்.  ஊரில் இருந்து உதவி செய்ய  வந்திருக்கும் நபரும் (வெங்கடேஷ் காக்கமுனு ) போலீசிடம் சிக்குகிறான்.  
 
சிறுமியை மட்டுமல்ல சிறுமியின் அம்மா அப்பா இருவரையும் கூட ஆம்புலன்ஸ் டிரைவர் ஏதோ செய்து விட்டதாக நம்பும் போலீஸ் அவனை அடித்துத் துவைக்க, நடந்தது என்ன? சிறுமியின் அம்மா அப்பாவுக்கு என்ன ஆனது என்பதே இந்த டோன்ட் ட்ரபுள் தி  ட்ரபுள்.
 
பல வித கமர்ஷியல் படங்கள், கதாபாத்திரங்களின் தொகுப்பாக ஒரு கதையை பண்ணி படம் எடுத்து இருக்கிறார்கள். 
 
சிறுமி கதை, கூடவே நாய்க்குட்டி. மேஜிக் , ஆவி, கொஞ்சம் தெய்வீகம் , கடைசியில் ஒரு திருப்பம் , நெகிழ்ச்சி என்று கமர்ஷியல் பல இலக்கணத்துக்குள் படம் இருக்கிறது. 
 
தயாரிப்பு தரம் அருமை . 
 
ஷஷாங்க் யேலேட்டியின் இயக்கம், கால பைரவாவின் இசை, பிராட் பிரான்சிஸ் ஏ சி எஸ் சின் ஒளிப்பதிவு எல்லாம் தரம். 
 
இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி வழங்கும் இந்தப் படத்துக்கு – அவரது பல படங்களில் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்த அவரது மனைவி ரமா ராஜமவுலி ஸ்டைலிஸ்ட் ஆக – சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். 
 
ஸ்கிரிப்ட் டெவலப்பர் எஸ் எஸ் காஞ்சி , இணை எழுத்தளார் ஹம்சா அலி  இருவரின் பங்களிப்பும் இருக்கிறது. 
 
இவை எல்லாவற்றையும் விட பகத் பாஸில் , சாரா பலேகர் இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். சாரா பலேக்கருக்கு  தமிழில் குரல் கொடுத்தவர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். 
 
மகேஷ் மஞ்ச்ரேக்கர் , சவுரப் சச்தேவா , வெங்கடேஷ் காக்கமுனு, சுப்பாராஜு இவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். 
 
நீளம்தான் அதிகம் .
 
எனினும் படம் கவர்கிறது  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *