ஓய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்கும் கேம் ஓவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
(watch kumaran arangam you tube channel
திரையிடப்பட முன்னோட்டம் இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற ஒரு த்ரில்லர் படம் என்பதை உணர்த்தியது . போன், வீடியோ கேம் , அடிக்ஷன், கொலை, மிரட்டல் என்று காட்சிகள் போனது
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சஷிகாந்த் ” இது தமிழ , தெலுங்கு இரண்டிலும் நேரடியாக எடுக்கப்பட்ட படம் இந்தியில் மொழி மாற்றம் செய்கிறோம் . தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது என்று நினைக்க வேண்டாம் ” என்றார் . அப்பச் சரி ….. அப்பச் சரி !
தாப்சி பேசும்போது, ” ஓய்நாட் என்பது எனக்கு பிடித்த வார்த்தை. அதன் பெயர் கொண்ட கம்பெனி என்பதே எனக்கு பிடித்த விஷயம் . படத்தை அஷ்வின் சிறப்பாக எடுத்துள்ளார் . இப்படி ஒரு படத்தில் நான் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று மும்பையில் சொன்ன போது, ஹீரோ யார் என்று கேட்டார்கள் .
என்னைப் பொறுத்தவரை இந்த படத்தை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கும் தயாரிப்பாளர், இயக்குனர் , மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் , உதவி இயக்குனர்கள் உட்பட அனைவருமே இந்த படத்தின் ஹீரோக்கள்தான் ” என்றார் .
இயக்குனர் அஷ்வின் பேசும்போது , ” மாயா எனது முதல் படம் . அடுத்து எஸ் ஜே சூர்யாவை வைத்து இறவாக் காலம் படத்த இயக்கினேன் . அந்தப் படம் வெளிவர தாமதம் ஆகிக் கொண்டு இருக்கிறது . அடுத்து இந்தப் படம் . இதற்கு முன்பு ஒரு படத்துக்காக நான் தாப்சீயை அணுகியபோது, இந்தக் கதை எனக்கு வேண்டாம் .
ஆனால் உங்கள் ரைட்டிங் பிரம்மாதம் . எனவே வேறு கதைக்கு நான் தேவைபட்டால் வாருங்கள் என்றார் . இந்தக் கதையை எழுதி முடித்ததும் அவரிடம் போனேன் . படித்து விட்டு உடனே சம்மத்தித்தார் . படம் சிறப்பாக வர முக்கிய காரணம் தயாரிப்பளர் சஷிகாந்த் . படம் ஜூன் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது| என்றார் .