(watch kumaran arangam you tube channel
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் மற்றும் ரமேஷ் வர்மா தயாரிப்பில், ஹவீஷ், ரகுமான், நந்திதா, த்ரிதா, அதிதி , பூஜிதா நடிப்பில் ரமேஷ் வர்மாவின் கதை திரைக்கதைக்கு நிசார் ஷாபி வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 7. படம் சுப ஸ்வரங்களா ? அப ஸ்வரமா ? பேசலாம் .
இரண்டு நாட்களாக கணவனை (ஹவீஷ்) காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த ஒரு பெண் ( நந்திதா ) , போலீஸ் அதிகாரியிடம் ( ரகுமான் ) தங்கள் காதல் கதையைக் கூறுகிறாள்.
சேர்ந்து வாழ்ந்த நிலையில் அலுவலக அதிகாரியிடமும் பிறகு தன்னிடமும் சண்டை போட்ட கணவன் காணமல் போனதை கூற, பாதியிலேயே நிறுத்தும் போலீஸ் அதிகாரி மீதி கதையை கூறுகிறார் . காரணம் இதே சம்பவங்களை கூறி இதே நபரை கணவன் என்று கூறி அவனைக் காணவில்லை என்று இன்னொரு பெண்ணும் புகார் கொடுத்து இருப்பதுதான் .

இந்த நிலையில் மூன்றாவது பெண்ணும் அப்படியே கதை சொல்லி புகார் கொடுக்க, பல பேரை திருமணம் செய்து ஏமாற்றியவன் என்று அவனை தேடுகிறது போலீஸ் .
சிக்கிய அவன் மூன்று பேரையும் யாரென்றே தெரியாது என்கிறான் .
இதோடு போச்சா ? நாலாவது பெண்ணும் அதே போல புகார் கூற , அவளை மட்டும் மனைவி என்று அவன் சொல்ல, அவனோ அவனை சுட்டுக் கொல்ல முயல்கிறாள் .
எது கதை ? எது நிஜம் ? யார் சொல்வது உண்மை ? அதை நோக்கிய காவல்துறையின் பயணத்தில் என்ன விளைந்தது என்பதே இந்த 7.

ரகுமான் , நந்திதாவை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முழுக்க தெலுங்கு நடிக நடிகையர் நிரம்பி வழியும் படம் .
தமிழிலும் எடுத்து கோர்த்து விட்டிருக்கிறார்கள் .
அந்த பாட்டி நடிப்பில் அசத்தி இருக்கிறார் . சபாஷ் .
நிசார் ஷாபியின் ஒளிப்பதிவு மிக அருமை
வித்தியாசமான கதை பண்ண வேண்டும் என்று முயற்சி செய்து இருக்கிறார்கள் . ஆனால் கேள்விகளை உருவாக்க முடிந்தவர்களுக்கு அதற்குரிய பதில்களை காரண காரியத்தோடு ரசிகர்களை ஒரு பொருட்டாக மதித்து சொல்லத் தெரியவில்லை .

மூன்று பெண்களும் ஒரே சம்பவங்களை ஒரே மாதிரி கூறும்போதே அவர்கள் சொல்வது போய் என்பது சாதாரண நபருக்கு கூட புரியும் . ஆனால் போலீஸ் அதிகாரிக்கு புரியும் .
ஒரு நல்ல மனைவி தன் கணவன் சில பெண்களை ஏமாற்றியதாக புகார் வந்ததற்காக என்ன ஏது என்று விசாரிக்காமலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சுடுவாளா ?
எனில் புகார் வந்த போது அவன் மனைவியை விட்டு எங்கு இருந்தான் ?
பிளாஷ்பேக்கில் வரும் ரெஜினா அடிப்படையில் மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருக்கட்டும் . அது அவர்கள் கதை அவர்கள் உரிமை . அனால் அதை வைத்து செய்யும் கதையில் நம்பகத்தன்மையுடன் கூடிய சுவாரஸ்யம் இருக்க வேண்டாமா ?

கிருஷ்ண மூர்த்திக்கு பிளாஷ் பேக்கில் மகள் மட்டும் இருக்கிறாள் . ஆனால் கடைசியில் ஹீரோ நான் கிருஷ்ண மூர்த்தி மகன் என்கிறான் . அது எப்போ ? அல்லது அந்த மகள் எங்கே ?
இப்படி படம் முழுக்க எழும் கேள்விகளால் படம் பார்க்கையில் ஒரு இடத்திலும் ஓட்ட முடியவில்லை.
ஆரம்பத்தில் சாதரணமாக காட்டப்படும் ஒரு கதாபாத்திரம் ஒரு நிலையில் வில்லத்தனமான விஸ்வ ரூபம் எடுக்கும் விதம் நிஜமாகவே அபாரம்
அதே நேரம் பாட்டியின் காதல் காத்திருப்பும் வெறித்தனமும் நேர்த்தியற்ற காட்சிகளால் வீணாகிறது . ( நெஞ்சம் மறப்பதில்லை நம்பியார் கேரக்டர் இன்ஸ்பிரேஷனில் அமைத்து இருக்கணும் . ஆனால் சுவாரஸ்யம் ரேஷனில் கூட இல்லை )
வித்தியாசமான முடிச்சுகள் போடுவதால் மட்டுமே ஒரு படம் ரசிகனை கவர்ந்து விடாது . அந்த முடிச்சுகளை போங்கு ஆட்டம் ஆடாமல் எப்படி அவிழ்க்கிறோம் என்பது ரொம்ப முக்கியம் . அதில் தவறி விட்டார்கள் .
(watch kumaran arangam you tube channel