இந்திரா @ விமர்சனம்

ஜே எஸ் எம்  மூவி எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜாபர் சாதிக், எம்பரர் என்டர்டைன்மென்ட் சார்பில்  இர்ஃபான் மாலிக் ஆகியோர் தயாரிக்க, 

வசந்த்  ரவி , ஜெயிலர் புகழ் ஆந்திர சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் , ராஜ்குமார் நடிப்பில்
 
சபரிஷ் நந்தா எழுதி இயக்கி இருக்கும் படம். 
 
கோவக்கார , குடிப்பழக்கம் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு (வசந்த் ரவி) மனைவியோடும் (மெஹ்ரீன் பிர்சாடா)  பிரச்சனை  .  கைதிகளை மோசமாக ஹேண்டில் செய்த வகையில் துறை விசாரணையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு அதைச் சரி செய்யவும் அவர் அலைகிறார் .. ஒரு நிலையில் அவரது கண்பார்வையும் போகிறது . — இன் ரேர் கேசஸ் அதிக ஆல்கஹால் அடிக்ஷன் என்று ஒரு பலவீனமான காரணம் கூறப்படுகிறது 
 
கண்ணிழந்த கணவன் படும் கஷ்டங்களைப் பார்க்கும் மனைவி , சில பல சம்பவங்களுக்கு பிறகு எல்லாவற்றையும் மறந்து விட்டு கணவன் மனைவி ஜோடி ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்வோம்  என்று முடிவு செய்கிறார் 
 
நகரில்  சில சைக்கோ கொலைகள் நடக்கின்றன. கொலைகாரன் ஆளைக் கொன்று தூக்கில் திங்க விட்டு விட்டு கையை மட்டும் வெட்டி,  பேருந்து  உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து விட்டுப் போய்விடுகிறான் . 
 
தியேட்டருக்கு விலை மாதுவை தள்ளிக் கொண்டு வரும் ஆள் , இரவில் நேரம் கழித்து ஹாஸ்டலுக்கு வரும் பெண்,  டாஸ்மாக் கடையில் சர்வர் போல நடித்து காசு வாங்கி குடிக்கும் நபர் இப்படி சிலர் கொல்லப்படுகிறார்கள் . கொல்பவர் நாற்பதுக்கு வயதுக்கு ஸ்ட்ராங்கான தோற்றத்தில் இருக்கும் சுனில்.
 
போலீஸ் அந்தக் கேசில் தீவிரமாக இருக்க, நம்ம கோவக்கார போலீஸ் தனது சஸ்பென்சனை நீக்க போராடி திட்டு திட்டுகளாக வாங்கிக் கொண்டு இருக்க, ஒரு நிலையில் போலீஸ்காரரின் மனைவியும் சைக்கோ பாணியில் கொல்லப்படுகிறார் . 
 
வைக்கோவை .. அடச்சே …. சைக்கோவை பிடித்து வெளுத்தால், “நான் இதுவரை இருபத்தி எட்டு சைக்கோ கொலைகள் பண்ணி இருக்கேன் . ஆனா இந்த போலீஸ்காரன் பொண்டாட்டியை நான் கொல்லல,,,” என்று சொல்கிறான் 
 
எனில் மனைவியை கொலை செய்தது யார் எதற்கு என்று ஒரு  கதை சொல்கிறார்கள் பாருங்கள். கொடுமை . 
 
இதுதான் இந்திரா. 
 
இந்திரா என்பது போலீஸ்காரனின் காதல் மனைவியின் பெயர் . மற்றபடி பெயர்க்காரணம் என்று எல்லாம் ஒன்றும் இல்லை. இதற்குப் பதில் படத்துக்கு இஸ்ரத் என்று பெயர் வைத்திருந்தால் கூட எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது . 
 
கண்ணிழந்த கேரக்டரில் வசந்த் ரவி , கொஞ்சம் ஓவர் என்றாலும் உற்சாகமாக சிரத்தை எடுத்து நடித்துள்ளார். உழைப்புக்கு  வாழ்த்துகள். 
 
வெள்ளைத் தோல் வேணியாக  மெஹரின் பிர்சாடா வாளிப்பான உடல்வாகு, புரபைல் முகம் என்று அழகாக இருக்கிறார் . ஆனால்] மூக்கையும் தாடையையும் கொஞ்சம் கிளாக் வைசில் திருகிப் போட்ட பீங்கான் களிமண் பொம்மை மாதிரி  இருக்கும், அவரது முகத்தின்  குலோசப்பை அப்பப்போ போட்டு கடுப்பேற்றுகிறார் இயக்குனர். .ஏன் தம்பி, ஒரு மனுஷன் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு  புடிக்காதா?
 
படத்தில் அசத்தி பின்னிப் பெடல்  எடுத்து இருப்பது ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ், இந்தப் படத்தின் ஒரே அட்டகாசம் இவர் 
 
அடுத்து இசை யமைப்பாளர் அஜ்மல் தாஸீன். கடமைக்கு ஒரு வேலை செய்யக் கூடாது என்ற சின்சியாரிட்டி தெரியுது . வாழ்த்துகள் . 
 
அடுத்து ரிதமிக் மற்றும் ஈஸ்தெட்டிங் கட்டிங்குகளால் கவர்கிறார் அனுபவப்  படத் தொகுப்பாளர் கே எல் பிரவீன். 
 
மேக்கிங்கில் என்னென்னமோ யோசிக்க வைத்து அசத்துகிறார் இயக்குனர் சபரிஷ் நந்தா . 
 
ஆனால் கதை திரைக்கதைதான்,  மூன்று வயசு மாணவன்,  நீள சைஸ் ஸ்கூல் நோட்டில் , அஞ்சுக்கு ஒரு மார்க் மட்டும் வாங்கும்படி,  ஆறு தன் வரலாறு கட்டுரையை,  கடமைக்கு எழுதி பக்கத்தை நிரப்பிய மாதிரி இருக்கிறது . 
 
அது என்ன? அமாவாசை இருட்டில் அஞ்சாறு  கோழி திருடியவனுக்கு  போலீஸ் யூனிபார்ம் போட்ட மாதிரி வசந்த் ரவியின் கேரக்டர் ஸ்கெட்ச் நிகழ்வு, , பிளாஷ் பேக் எல்லா சமயத்திலுமே  இருக்கிறது ? . 
 
ஒரு கை மட்டும் வெட்டி, பொது இடத்தில் வைக்கும் சைக்கோ என்பதில் ஏதாவது விஷயம் இருக்கும் என்று பார்த்தால் , “இந்தா பாருங்க…. நீங்களா எதையும் எதிர்பார்த்து அப்புறம் எங்களைக் குறை சொன்னா கெட்ட கோபம் வரும் . கையை மட்டும் வெட்ட காரணம் எல்லாம் இல்ல . அது அவன் ஸ்டைல் அம்புட்டுதான்” என்று டோர் குளோஸ் செய்கிறார் டாக்டர் நிழல்கள் ரவி/ ஏன்?  
 
“முதல் கொலையைப் பார்த்த போது சைக்கோ கொலையாளி அவ்வளவு மோசம் எல்லாம் இல்லப்பா “என்று யோசித்தால், அடுத்து இரவு நேரத்தில் வேலை முடிந்து லேட்டாக வரும் அப்பாவி உழைக்கும் மகளிரைக் கொள்கிறான் சைக்கோ . அதுவும் போச்சு . ஏன்? 
 
சைக்கோ கொலைகாரனாக ஆந்திர சுனிலை காட்டுவதால் இதை டெவெலப் செய்து,  தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆவதால் அங்கே கல்லா கட்டும் பிளான் இருக்கும் என்று நம்பினால்,  அதுவும் இல்லை. ஏன்? 
 
”நான் கொன்ன இருபத்தி எட்டு கொலையில் போலீஸ்காரன் பொண்டாட்டி இல்லியே” என்று சொன்ன பிறகு,  படத்தில் அவர் காணவே இல்லை. அந்த இருபத்தி எட்டு சைக்கோ கொலை கேஸ் என்ன ஆச்சு என்று ஒரு காட்சி அட்லீஸ்ட் ஒரு வசனம் வைக்கக் கூடாதா ? 
 
ஒரு பணக்கார தம்பதி,  வேலைக்காரியை  நம்பி வீட்டு சாவியை கொடுத்து விட்டுப் போகிறது . அங்கே அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் காதலன் தினமும் வருவதும் வேலைக்காரக் காதலியை கொஞ்சுவதும் என்ன நேர்மை. அதுல யாரு செத்தா என்ன? யாரை யாரு பழி வாங்கினா என்ன?
 
டென்சனாக வரும் போலீஸ்காரன் வேலைக்கார இளம்பெண்ணிடம், விலை  உயர்ந்த சரக்கு பாட்டில் எடுத்து வரச் சொல்வது சரியா? அவள் கொண்டு வந்து வைக்கும்போது பயத்தில் கீழே போட்டு உடைக்க, அவளை அப்படி வெறியோடு அடிப்பது சரியா?
 
அடித்த அடியில் அவள் கீழே விழுந்து செத்து விட்டாள்….. டியூட்டியில் இருக்கும் போலீஸ்காரன் – தனக்கு மிக நெருங்கிய நண்பன் ஒருவன் வேறு போலீசில்  இருக்கும்போது,- அந்த பாடியை மறைப்பது அவனுக்கு பெரிய வேலையா?
 
அதற்கு எதற்கு காதல் மனைவியை அதில் கமிட் செய்ய வேண்டும். பெண்ணின் பிணத்தை மனைவியோடு சேர்ந்து சென்று எதற்குப் புதைக்க வேண்டும்? 
 
அந்த மனைவி  ஏன் அதை செய்ய வேண்டும் . ?
 
இப்படி ஒரு சம்பவத்தை இருவரும் செய்து இருக்கும்போது அது பற்றிய எந்த லஜ்ஜையும் இல்லாமல் பேச்சில் காட்சியில் உணர்வில் ஒருதடவை கூட எந்த அடையாளமும் இல்லாமல் கணவனும் மனைவியும் எதற்கு   லிப்ஸ்டிக் திங்க வேண்டும்?
 
கணவனும் மனைவியும்  இரவில் இரவில் தங்கள் பெட் ரூமில் பப்பரப்பா என்று தூங்குவதை  ஒரு சுள்ளான் கொலைகாரன் அடிக்கடி இரவில் உள்ளே நுழைந்து  கால் முட்டையை மடித்துக் கட்டியபடி இரவுகளில் அதே பெட்டில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா (பேயாக இருந்தா கூட லாஜிக் இடிக்குதே என்று சொல்லுமே)
 
அப்படி தினமும் இரவில் அவன் பார்த்துக் கொண்டிருக்க, கணவன் மனைவி இருவரில் ஒருவரில் ஒருவர் கூடவா ஒரு முறை கூடவா தண்ணி குடிக்க, ஒண்ணுக்குப் போக முழிக்கவில்லை. இருவரின் பி பி சுகர் லெவல் 140க்கு மேல் ஒரு பாயின்ட் கூடவா யாருக்கும் ஏறவில்லை? அட பாகற்காயே. 
 
அது மட்டுமல்ல. இரவுகளில் வீட்டுக்குள் நுழைந்து கணவனான போலீஸ்காரன் குடிக்கும் சரக்கில் பாய்சன் கலந்து அந்தக் குடிக்கும் நிலையில்  கண் பார்வை போவதற்கும் காரணம் அவன்தானாம் 
 
காதலியை உண்மையாக நேசிப்பவன் அவள் வேலை செய்யும் வீட்டுக்கு, பகலில் வேறு யாருமில்லா சமயத்தில் அடிக்கடி  ஏன் போக வேண்டும்? 
 
தன தவறு பற்றி ஒரு வார்த்தையில் கூட வருத்தம் காட்டாமல் என் காதலியை அவன் கொன்று விட்டான் எனவே அவன்பொண்டாட்டியை நான் கொல்றேன் என்று ஏன் கொல்லனும் . (அடேய் உங்களுக்கு நிஜ சைக்கோக்கள் எவ்வளவோ பெட்டர்டா)
 
போலீஸ்  ஸ்டேஷனுக்கு டீ கொண்டு வரும் கெச்சலான டீக்கடைப் பையன் மேல் சந்தேகப்பட்டு நாலு போலீஸ் அவனை வதக் வதக் என்று மிதிப்பது போல அந்த பஞ்சு முட்டாய் கிளைமாக்ஸ் பைட் எதுக்கு ?
 
”மனனவியைக் கொன்றவனை பழிவாங்குவேன் ” என்று சபதம் எடுக்கிறான் கண் பார்வை இழந்த ஒரு போலேச்ச்கரன். அவநதி நெருங்கின நபரான சக போலீஸ்காரன் “அதை எல்லாம் சட்டம் பாத்துக்கும் . நீ உன்ன கவனிச்சுக்கோ ” என்று அக்கறையோடு கூறுகிறான் நெருங்கிய உண்மை நண்பனான இன்னொரு போலீஸ்காரன். 
 
உடனே கண்ணிழந்த போலீஸ்காரன் ” என்னடா பேசற. இதே உன் பொண்டாட்டி செத்து இருந்தா சும்மா விட்டிருப்பியா?’ என்கிறான் . இதுவாப்பா நட்பு? என்னப்பா நீங்க எல்லாம் எழுதறீங்க ? ” இதே உன் குடும்பத்துல ஒன்னு நடந்து இருந்தா நான் அந்தக்  கொலைகாரனா சும்மா விட்ருப்பனடா?”என்று கேட்கணும் . அதுதானப்பா நட்பு? 
 
யப்பா…ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் உருப்படியா எழுதுங்கப்பா 
 
மொத்தத்தில்  இந்திரா ……. பிரிய ‘தர்ஷினி’ இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *