உருட்டு @ விமர்சனம்

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் சார்பில் பத்மராஜூ ஜெய் சங்கர் தயாரிப்பில் நாகேஷின் பேரன் கஜேஷ்,   ரித்விகா ஸ்ரேயா ,மொட்டை ராஜேந்திரன் தயாரிப்பாளர் . ஆகியோர் நடிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கி இருக்கும் படம் 
தாசில்தார் பொண்டாட்டியை தூக்கிக் கொண்டு வருவது முதல் எல்லா அராஜகமும் செய்து சொத்து வாங்கும் நபரின் (ஜெய் சங்கர்) மகளுக்கும் (ரித்விகா ஷ்ரேயா ) ஊரில் ஒரு ஏழை இளைஞனுக்கும் (கஜேஷ்)  மோதல் அப்புறம் காதல். 

காதலனின் பால்ய காலந்தொட்ட  எதிரி, பெண்ணின்  அப்பாவிடம் போட்டுக் கொடுக்க, குடுமப் பகை கொண்ட தாய்மாமன் வீட்டில் காதலனை மறைத்து து வைக்கிறாள் காதலி . அவனோடு வாழ அவள் விரும்ப , அவனோ மொடாக் குடிகாரன் ஆகிறான். அவனை மாற்ற முயன்று தோற்று காதலி   ‘புரச்சி’ப் பெண்ணாகா மாறுவதே படம் 
இதை அப்படியே ஏனோ தானோ என்று எடுத்து இருக்கிறார்கள் . 

இயக்குனரின் வசனங்கள்   சில இடங்களில் அருமை. பல இடங்களில் மொக்கை . காமெடியும் கார்த்திக் கிருஷ்ணனின் பின்னணி இசையும்  அப்படியே . 

பெப்சி தாஸ், பாஸ்கர் அருணகிரி இசையில் எழுதி இருக்கும் அந்த, இடைவேளை மற்றும்  கிளைமாக்ஸ் குத்து பாட்டுகள் அந்தக் கால பஸ் பயணங்களில் டீ குடிக்க இரவில் பஸ் நிற்கும் இடங்களில் போடப்படும் குரல், மொழி, ரகம் 

கஜேஷ் நாகேஷ் வெள்ளையாக இருக்கிறார். உற்சாகமாக நடிக்கிறார் . நல்ல கதைத் தேர்வு முக்கியம். பிரஸ் ஷோ முடிந்த பின்னரும் கேரக்டரிலேயே இருந்தார் நாயகி ரித்விகா ஸ்ரேயா. ஆனால் படத்தில் கேரக்டருக்குள் போகாமல் நடிகையாகவே இருந்தார். 

ஒரு முறை உருட்டவே ஒரு உருட்டுக் கட்டை, கடின சமதளம், ஏதோ மாவு வேண்டும் . எதுவுமே இல்லாமல் உருட்டினால் எப்படி? 

திரைக்கதைக்குள் சின்னச் சின்ன நகாசுகள் உண்டு . ஆனால் கெட்டுப் புளித்த மாவில் கண்ணுக்கு அழகாக   சப்பாத்தி உருட்ட முயன்று தோற்று இருக்கிறார்கள் . ஏன்னா மாவு மொக்கை வாடை.

அகண்ட பெண்களை ஆபாசமாக பயன்படுத்தி காமெடி என்று சொல்லும் ஆபாச வக்கிரம் எப்போது மாறும்? எல்லாமே சோழா பூரி 

குண்டான ககுட்டையான ஆண்களை அருவருப்பாக குதிக்க வைப்பது எப்போது மாறும் 

அடுத்த முறை  உருட்டுவதாக   இருந்தால் நல்ல பொருட்கள் வாங்கி அப்புறம் சப்பாத்திக் கட்டையில் கை வைக்கவும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *