ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷி மற்றும் பனோரமாஸ் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வசந்த் செல்வம், ஹக்கீம் ஷா , அகஸ்டின், விஜய் ராம், தினேஷ் மணி நடிப்பில் நிஷாந்த் கலிதிண்டி இயக்கி இருக்கும் படம் கடைசில பிரியாணி.
ஆக்ரோஷமான அம்மாவால் வளர்க்கப்படும் அண்ணன்கள் இருவர் , குடும்பம் பிரிந்து கேரளாவில் அமைதியான அப்பாவால் வளர்க்கப்பட்ட தம்பியைப் பார்த்து அழைத்துப் போக வருகின்றனர். வந்த இடத்தில்தான் அப்பாவைக் கொன்றவன் யார் என்று தெரிகிறது .
கொலைகாரனை கொன்று பழி தீர்க்க அண்ணன்கள் இருவரும் முடிவு செய்ய, விருப்பம் இல்லாத பயந்தாங்குளி தம்பியும் கட்டாயம் காரணமாக உடன் செல்ல , அங்கே கொலைகாரனின் சைக்கோ மகனிடம் சிக்கிக் கொள்கின்றனர். கேரள போலீசை பகடைக் காயாக உருட்டும் அந்த சைக்கோவிடம் சிக்கிய சகோக்களின் நிலை என்னை என்பதே கடைசில பிரியாணி .
வித்தியாசமான திரைக்கதை முயற்சி . கேரளக் காடுகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் கலிதிண்டி .

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியம் இல்லாத ஆண்கள் நிறைந்த படம்
ராவான வசனங்கள்
படத்தின் ஆகப் பெரும் பலம் இயக்குனரின் கேமராக் கோணங்களும் ஹெஸ்டினின் அசத்தலான ஒளிப்பதிவும்.
அடர்ந்த கேரளக் காடுகள் , விதவிதமான ஜந்துக்கள், ஈரமும் இருளும் சேர்ந்து ஊரும் மழை நிமிடங்கள் , அதற்குள் பயணிக்கும் மனிதர்கள் என்று நம்மையே காட்டுக்குள் தள்ளி விடுகிறார்கள் .
நடித்திருப்போரும் வித்தியாசமான முக பாவனை வித்தியாச நடிப்பு என்று கவனம் கவர்கிறார்கள்
விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்து கதை சொல்லியாக் வருவதோடு ஒரு காட்சியில் கவுரவத் தோற்றத்தில் நடித்தும் இருக்கிறார் .
திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்
மாறுபட்ட முயற்சி