பொன்மாணிக்கவேல் @விமர்சனம்

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் பிரபு தேவா , நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ,பாகுபலி பிரபாகர் நடிப்பில் ஏ சி முகில் செல்லப்பன் இயக்கி இருக்கும் படம் பொன் மாணிக்கவேல்.

 ஒரு ஜட்ஜ் துப்பாக்கியால் சுடப்பட்டும் பிறகு தலை துண்டிக்கப்பட்டும்,  கொல்லப் படுகிறார் . போலீசுக்கு சரியான துப்பு எதுவும் கிடைக்காத நிலையில் பொன் மாணிக்கவேல் (பிரபுதேவா) நியமிக்கப்படுகிறார் . 

முன்பே ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தர முடியாத நிலையில் பதிவியையே ராஜினாமா செய்ய முயன்றவர் இவர். மனைவி மட்டும் உண்டு .

ஜட்ஜை அடுத்து ஒரு இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். அடுத்து கொலைகாரன் குறி ஒரு பெரிய தொழிலதிபர்தான் என்ற நிலையில் காவல்துறை பணிக்கும் அப்பாற்பட்டு தொழில் அதிபரைக் காப்பாற்ற பல கோடி பணம் கேட்டு டீல் பேசுகிறார் நாயகன் . ஏன் எதற்கு அப்புறம் என்ன நடந்தது என்பதே படம். 

கோடீஸ்வர பெண் பித்த போதை பழக்க கோடீஸ்வரர்கள் அவர்களால் பாதிக்கப்படும் இளம்பெண்கள் , குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் பொருமும் நபர்களில் ஒருவர் எடுக்கும் முடிவு என பயணிக்கும் படம் இது . 

பெண்கள் பாதிக்கப்படுவதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் . அடையாளம் காண முடியாத துப்பாக்கி , துப்பாக்கியால் இருந்து வெளிப்படும் குண்டுகள் தொடர்பான சில தகவல்கள் சிறப்பு. ரகசிய போலீசின் விசாரணை விசயங்களும் ஒகே ரகம்.

மற்றபடி படத்தில் புதிய உத்தி, பாராட்டும்படியான திரைக்கதை உத்தி என்று எதுவும் இல்லை . ஆயிரம் முறை பார்த்து சலித்த காட்சிகள் , இந்த படத்தின் கதைக்கு தேவையற்ற காட்சிகள் என்று படம் போகிறது.

 இதில் ஒரு முரட்டுத்தனமான போலீஸ்காரருக்கு பெருவளத்தான் என்று  சோழ மன்னன் கரிகால் சோழனின் பெயரை வைத்து கிண்டல் செய்வது எல்லாம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

 கதை திரைக்கதை வசனம் இயக்கம் நடிக நடிகையரின் நடிப்பு என்று எல்லா வகையிலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய படம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *