வேட்டை சமூகம் வீழ்ந்த கதை சொல்லும், ‘கள்ளன்’

Copy of k 2

ஆதி மனிதனான ஆதித் தமிழனின் வேட்டைக் கருவி மரத்தால் ஆன கோல்தான் , அதே நேரம் ஒரு வேட்டைக்காரன் தன்னை விட சில சக்தி வாய்ந்த உயிர்களை பழக்கி வைக்கவேண்டும் என்பதன் அடையாளம்தான் முருகனிடம் கோழியும், ஒரு உதவியாள உயிராக இருந்தது என்ற அமைவு.

உலோக காலம் துவங்கிய பிறகு கோல் வேல் ஆனது . கோழி மயில் ஆனது .

தமிழகத்தின் வேட்டை சமூகத்துக்கு என்று வேறெங்கும் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கண்ணியம் உண்டு . உணவுக்காக விலங்குகளை பறவைகளை வேட்டையாடினாலும் அவற்றை ரொம்பவே மரண வலியில் துடிக்க விடாமல் சட்டென்று கொல்லும் உத்திகள் இங்கு இருந்தன .

Copy of k 1

பின்னாளில் இங்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்த உத்திகளை இங்கிலாந்தில் உள்ள தன் நாட்டுக் கைதிகளைக் கொல்லவும் கருணைக் கொலை செய்யவும் பயன்படுத்தினார்கள் என்று கூறப்படுவதும் உண்டு .

அப்படிப்பட்ட வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படமாம் இது.

படத்தைப் பற்றிக் கூறும் கரு.பழனியப்பன் “

Copy of DSC_0171

சந்திரா என்னிடம் இந்தக் கதையைக் கூறிய உடன் வியந்து போனேன் . முதல் காரணம் அந்தக் கதை . இரண்டாவது காரணம் பல ஆண் இயக்குனர்களாலேயே யோசிக்க முடியாத தெறிப்பான கதையை,  பெண் இயக்குனரான சந்திரா சொன்னார் .  இது நாம் தவறாமல் இடம்பெற  வேண்டிய திரைப் பதிவு என்று தோன்றியது . உடனே நடிக்க ஒத்துக் கொண்டேன் ” என்கிறார்

ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு , இசை கே, பாடல்கள் நா.முத்துக்குமார் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறைக்கும் அர்த்தமுள்ள ஆட்களை தேர்ந்தெடுத்து அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் சந்திராவின் இப்படத்தை எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.

வாகாகச் சொல்லப்படும் வரலாறுகள்,  வளமான படைப்புகள் ஆகும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →