நாடறிந்த கபடி வீரன் மற்றும் பயிற்சியாளனுமான ஒருவர் ( சசிகுமார் ) வடக்கத்திய விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவரால், தமிழன் என்பதாலும் அநியாயத்துக்கு துணை போகாதததாலும் பாதிக்கப்பட்டு இருப்பவன் .
ராணுவ வீரர் உருவாக்கிய அணியை வெற்றி பெற வைப்பதன் மூலம் , தனது பின்னடைவுக்கு காரணமான வடக்கத்திய அதிகாரிக்கு பாடம் புகட்ட திட்டமிடுகிறான் அவன் .
இந்த நிலையில் அகில இந்திய கபடி போட்டியின் போது, வீராங்கனைகள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் ராணுவ வீரருக்கும் பயிர்சியாளனுக்கும் கருத்து வேறுபாடு வந்து ஆளுக்கு ஒன்று சொல்ல,
ஏழ்மை நிலையில் போராடி பயிற்சி பெற்று , வருங்கால முன்னேற்றத்தின் `வழியாக இந்த போட்டியை எண்ணி வந்திருக்கும் அந்த வீராங்கனைகள் வென்றார்களா இல்லையா என்பதே இந்த கென்னடி கிளப் .
ராணுவ வீரர் நடத்தும் கபடி கிளப்பின் பெயர் கென்னடி கிளப் .
மகளிர் கபடியை வைத்து ஒரு படம் .
கபாடி வீராங்கனைகள் மற்றும் கிராமத்து பாத்திர தேர்வுகளில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் .
நம்ம ஊரில் எப்படிப்பட்ட சூழலில் இருந்து கிராமத்துப் பிள்ளைகள் விளையாட்டுத் துறைக் கனவுகளோடு வருகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள் .
ஆனால் அந்த ஆரம்ப ஜோர் அப்புறம் இல்லை .
இதே சுசீந்திரனே இயக்கிய ஜீவா, இறுதிச் சுற்று , கனா என்று, விளையாட்டுப் போட்டிக்காக செல்லும் நம்ம வீரர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அதே போலவே சொல்லும் படம் . காட்சிகளில் ஆழமோ சிரத்தையோ இல்லை .
கபடி போட்டிகளின் படமாக்கலும் சிறப்பாக இல்லை
முக்கிய நடிகர்கள் எல்லாம் மிகை நடிப்பாகவோ அல்லது காமா சோமா என்றோ நடித்துக் கொண்டு இருக்க, காதலி கம் மனைவி என்ன சொன்னாலும் கேட்கும் பாத்திரத்தில் நடித்து இருப்பவர் அட என்று ஆச்சர்யப் பட வைக்கிறார் . அந்த காட்சிகளும் சிறப்பு.
பரோட்டா மாஸ்டர் டூ பரோடா அணி கோச் ஆக வரும் சூரி சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் . சபாஷ்
முந்தைய விளையாட்டுப் படங்களில் இருந்து வித்தியாசமான யோசிக்க வேண்டும் என்பதற்காக கோச்சுக்கும் ராணுவ வீரருக்குமே, எப்படி ஆட வைப்பது என்பதில் கருத்து வேறுபாடு என்ற திருப்பம் எல்லாம் .. ரொம்ப ஓவர் . கேரக்டர் அசாசினேசன்.
கடைசி காட்சியில் அமைச்சரை நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் என்ற இமேஜுக்காக படத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்திருக்கிறார் சுசீந்திரன்.
ஆனால் வெற்றிக்கு அது மட்டும் போதுமா ?