மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம் சுப்ரமணியன் தயாரிக்க, மா க ப ஆனந்த், வத்சன், சூஸா குமார், அருள்தாஸ் நடிப்பில்
மார்ட்டின் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் மாணிக் . படம் மாணிக்கமா ? இல்லை அலுமினியமா ? பேசலாம் .
கேவா கலர் காலத்தில் ஒரு ஜொள்ளு பண்ணையார் (மனோபாலா) , தன் மகளின் காதலனை (மா க ப ஆனந்த்) அடித்துக் கொல்கிறார் .
மேல் லோகத்தில் சொர்க்கம் புகும் காதலன் , மீண்டும் பூமியில் பிறக்கிறான் .பெயர் மாணிக் .நண்பன் ஒருவன் ( வத்சன் ) .

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (இந்தியா சிமென்ட் சீனிவாசனிடம் இருந்து) விலைக்கு வாங்க வேண்டும் என்பது மாணிக்கின் லட்சியம்
வினோதமான சாமியார் ஒருவரை மாணிக் சந்திக்க அவர் அவனுக்கு ஒரு வித்தியாசமான வரம் தருகிறார் .
அதன்படி அவனிடம் ஐ லவ் யூ சொல்லும் பெண்களின் அப்பா உடனே இறந்து விடுவார்கள். .
அதை வைத்து சம்பாதிக்க மாணிக் திட்டமிடுகிறான் . யாரையாவது கொல்ல சொல்லி யாரும் வேலை கொடுத்தால் உடனே கொல்லப்பட வேண்டிய நபரின்,

மகளை பிடித்து மயக்கி அவர்களை ஐ லவ் யூ சொல்ல வைத்து , அதன் மூலம் அப்பாக்களை சாகடித்து பணம் சம்பாதிக்கிறான் .
இந்த நிலையில் கீர்த்தி என்ற ஒரு பெண் மீது (சூஸா குமார்,) மாணிக்குக்கு காதல் வருகிறது .
அவளது அப்பா உடம்பு சரி இல்லாமல் கிடக்கிறார் .
அவளிடம் ”முதலிரவு வரை ஐ லவ் யூ சொல்லாமல் காதலிக்கலாம்” என்று சொல்லி விடுகிறான் .
எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் அவளையறியாமல் ஐ லவ் யூ சொல்லி விட , அவள் அப்பா கதி என்ன ? அப்புறம் நடந்தது என்ன என்பதுதான் படத்தின் கதை……
யா என்றால் அது இல்லை .

எதிர்கட்சித் தலைவரின் தம்பியான ஒரு அப்நார்மல் தாதா (அருள்தாஸ்) மாணிக்கிடம்,
”முதலமைச்சரை கொல்லா விட்டால் உன் நண்பனைக் கொன்று விடுவேன்” என்று மிரட்ட,
மாணிக்கும் முதல்வரின் மகளை மயக்க, அவள் ஐ லவ் யூ சொல்லும் வேளையில்
நிஜக் காதலி கீர்த்தி வந்து அதை தடுத்து விட , முதல்வரைக் கொல்ல முடியாமல் போகிறது.

தாதா டெர்ரர் ஆக, இந்த நிலையில், மாணிக்குக்கு வரம் கொடுத்த சாமியார் , இந்தப் பிறவியில் தீவிரவாதியாக பிறந்து இருக்கும்
போன பிறவி பண்ணையார் ஆகியோரும் கதைக்குள் நுழைய அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் இந்த மாணிக் .
திரைக்கதையே உங்களுக்கு ஒரு விஷயத்தை புரிய வைத்து இருக்கும் .
வித்தியாசமாக ஒரு கதை பண்ணியே தீர வேண்டும் என்று சூடம் கொளுத்தி கும்பிட்டுவிட்டு பண்ணிய கதை இது என்று .
கதை மட்டும் அல்ல … காட்சிகளும் அப்படியே .

உதரணமாக செத்து மேல் லோகம் போனால் அங்கே நமக்கு இதுவரை சொல்லப் பட்ட எமதர்மன், சித்திர குப்தன் என்று யாரும் இல்லை .
ஒரு முடிவளர்த்த சாமியார் , அவருக்கு தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கும் பெண் உதவியாளர்,
அவருக்கு சின்ன மின் விசிறியை பிடித்துக் கொண்டு இருக்கும் பெண், கண்ணாடி பார்த்து லிப் ஸ்டிக் சரி செய்து கொண்டே இருக்கும் பெண்..
இவர்கள்தான் சொர்க்க நரகத்துக்கு பிரித்து அனுப்பும் வேலை… மறு பிறவிக்கு அனுப்பும் அதிகாரம் அனைத்தும்…. கொண்டவர்களாக இருக்கிறார்கள் .

சொர்க்கத்தில் எம்ஜிஆர் எல்லாம் வருகிறார் .
மாணிக்கிடம் ஐ லவ் யூ சொல்லும் பெண்களின் அப்பா ஒவ்வொருவரும் சாகும் விதம் வெரைட்டி . ரசனை .
இந்த வித்தியாச சிந்தனை முயற்சிக்கு இயக்குனர் மார்ட்டினுக்கு ஒரு பாராட்டு !
கதாநாயகி ஐ லவ் யூ சொன்ன உடன் அவளது அப்பாவுக்கு என்ன ஆச்சு என்ற விசயத்துக்கு ஒரு சீன் வைத்து இருக்கிறார்கள் .
கொஞ்சம் விவகாரமான சீன் என்றாலும் காமெடியாகப் பார்த்தால் செம ரகளை .
நாயகன் நாயகி டூயட் பாடலை அழகாக எடுத்துள்ளார்கள் . அதில் தரணி குமாரின் இசை, பழநிகுமாரின் ஒளிப்பதிவு,

வினோத் ராஜ் குமாரின் கலை இயக்கம், செந்தில்குமாரின் உடைகள், நடனம், அனைத்தும் அருமை
மா க ப ஆனந்த் அந்தக் கால நடை உடை பாவனைகளில் கவர்கிறார் . ஒன் லைனர்களில் சிரிக்க வைக்கிறார் .
சூஸா குமார் அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் .
வத்சன் ஒகே . அருள்தாஸ் தனது மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக முயன்று இருக்கிறார் .

அருள் தாஸ் சம்மந்தப்பட்ட காட்சிகளை இப்படி ஓவராக காட்டாமல் கொஞ்சம் காமெடியாக முயன்று இருக்கலாம் .
இரண்டாம் பாதியிலும் பலான காமெடிகளை பட்டும் படாமலும் மட்டும் வைத்து இருக்கலாம் .
(அதாவது கதாநாயகி அப்பா விஷயம் மாதிரி… அந்த அளவில் மட்டும் !).
காமெடியோ சீரியசோ மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் சின்சியராக இருந்திருக்கலாம்