ஹெச் 3 சினிமாஸ் தயாரிக்க கஸ்ஸாலி , அனு கிருஷ்ணா மனிஷா கவுர், சுப்பு பஞ்சு , காதல் சுகுமார் நெல்லை சிவா நடிக்க, கஸ்ஸாலி இசை அமைத்து எழுதி இயக்கி இருக்கும் படம் மனுஷனா நீ ?
மருத்துவத்தை வியாபாரமாக்கி , கோடி கோடியாக பணம் சம்பாதிக்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் அதற்காக பறவைகள் , மிருகங்கள் , மட்டுமல்லாது ஏழை நாடுகளில் வாழும் மக்களையும் நேரடியாக ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது உண்டு .
சில ஏழை நாடுகளில் நோய்களுக்கு மருந்து போல பலருக்கும் கொடுத்து சோதனை செய்வது உண்டு . அதனால் அம்மக்கள் பாதிக்கப் படுவதும் உண்டு .
அந்த வகையில் பணக்கார மனிதர்களின் ஆயுளை அவர்களது இன்றைய வயதில் இருந்து இன்னொரு நூறு வருடம் கூட்டி அதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க முயல்கின்றன அந்த பன்னாட்டு நிறுவனங்கள் .
அதற்கு அடிமையாகும் நம்ம ஊரு டாக்டர் ஒருவர் ( கஸ்ஸாலி ) மூலம் ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது .
காரணம் காதலன் பெரும் அபாய நோய்க்கு ஆளாகிறான் . அவன் பிழைத்தானா ? அந்த காதல் பிழைத்ததா ? டாக்டர் என்ன ஆனார் ? என்பதே இந்த மனுஷனா நீ ?
வித்தியாசமான ஆனால் அவசியமான மெடிக்கல் கிரைம் பற்றி பேசுகிறது படம் .
மற்றபடி படமாக திரைக்கதை, இயக்கம், தொழில் நுட்பம் , நடிக நடிகையரிடம் வேலை வாங்குதல் இதெல்லாம் சிறப்பாக ஒரு படத்துக்கு தேவை .