கியூ என்டர்டைன்மென்ட் சார்பில் லக்கி சாஜர் தயாரிக்க, பரத், அபர்ணா வினோத் , கோகுல் சிவா , பேபி ஆரத்யா ஸ்ரீ , அருவி பாலா நடிப்பில் ஷரங் எழுதி இயக்கி சோனி லிவ் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் நடுவன்.
கொடைக்கானல் டீ எஸ்டேட்டில் முக்கியப் பொறுப்பில், எப்போதும் வேலை வேலை என்று இருக்கிற ஒருவனின் (பரத்) காதல் மனைவிக்கும் (அபர்ணா) ,
அந்த நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரரும் , அந்தக் கணவனின் நண்பனும் – தவிர அந்த தம்பதியின் காதல் திருமணத்துக்கே காரணமனவனுமான ஒருவனுக்கும் ( கோகுல் சிவா)

வந்த கள்ளக்காதலைத் தெரிந்து கொண்டதால் …
கணவனை நம்பி வேலை தேடி வந்த ஒரு சிறுவன் (அருவிபாலா) அவனும் ஒரு நிலையில் அயோக்கியனால் என்ன ஆகும் என்பதே நடுவன்.
கொடைக்கானல்… , வீடுகள், இரவு நேர பனி, பகல் நேர மென் வெயில், இருள் ஒளிக் கவிதைகள் , கதைக்கு ஏற்ற மர்ம அமைதி, நிதானமான அழுத்தமான ஷாட்கள், சிறப்பான படமாக்கல், என்று முதலில் நம்மைக் கவர்பவர் இயக்குனர் ஷாரங் தான் .

பரத், அபர்ணா, க்குள் சிவா, அருவி பலா, பேபி ஆரத்யா ஸ்ரீ , யோக் ஜேபி , ஜார்ஜ் மரியான்ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் .
யுவாவின் ஒளிப்பதிவு படத்துக்கான mood ஐ உருவாக்கிக் கொடுத்து பெரும்பலம் சேர்க்கிறது . தரன் குமாரின் பின்னணி இசையும் அருமை .
ஒலிப் படத் தொகுப்பும் அருமை .

முதல் பாதியில் செலுத்தப்பட்ட அம்னு போல செல்லும் திரைக்கதை இரண்டாம் பகுதியில் நூலும் வாலும் அறுந்த பட்டம் போல திசை கெட்டுப் பறக்கிறது .
எனினும் படமாக்கலால் காப்பாற்றுகிறார் இயக்குனர் .
நடுவன்.. அழுத்தம்