கோல்டன் ஃபிரை டே ஃபிலிம்ஸ் சார்பில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா மற்றும் ஷாலினி ஆகியோர் தயாரிக்க,
ஸ்ரீகாந்த், சந்தானம் , சுவாதி , ஜெயப்பிரகாஷ் நடிப்பில் விஜய் ஆண்டனி இசையில்
கணேஷா என்பவர் இயக்கி இருக்கும் படம் நம்பியார் .
இந்த நம்பியார் ஹீரோவா? வில்லனா ? காமடியனா ? பார்க்கலாம்
ஐ ஏ எஸ் படிக்கும் (எம் ஜி ) ராமச்சந்திரனுக்கு (ஸ்ரீகாந்த்) வீட்டில் அம்மா அப்பா அண்ணன் அண்ணி ஆகியோரோடு சரியான புரிதல் இல்லை .
இந்த நிலையில் சரோஜா(தேவி) என்ற பெண்ணை பெண்ணை (சுவாதி) அவன் காதலிப்பதாக நினைத்து அவனது குடும்பம் அவனை கண்டிக்கிறது .
ஒரு நிலையில் அதனாலேயே அந்தப் பெண்ணை காதலிக்கவும் செய்கிறான் . ஆனால் அவளுக்கும் அவனுக்கும் கூட நல்ல புரிதல் அமையவில்லை .
இந்த நிலையில் அவன் மனசாட்சி ஓர் உருவம் எடுத்து (சந்தானம்) வருகிறது . ஆனால் அது நம்பியார் மாதிரி வில்லனாக இருக்கிறது .
”நல்லவனாக இருந்து பலன் இல்லை . வில்லனாக மாறிப் பார் . எல்லோரும் நடுங்குவார்கள் ” என்று வற்புறுத்துகிறது .
ஒரு நிலை வரை அதைக் கட்டிப் போடும் ராமச்சந்திரன் முடியாத போது நம்பியாரை ஆக்ஷனில் இறக்குகிறான் .
விளைவு ? குடி போதையில் அப்பா, அண்ணன் , அண்ணி ஆகியோரை அடி பின்னி எடுக்கிறான் . காதலிக்கும் பெண்ணை கற்பழிக்கப் போகிறான். வில்லங்கமான போலீஸ் அதிகாரியின் பகைக்கு ஆளாகிறான் .
நிலைமை விபரீதம் ஆகிறது . அப்போதும் நம்பியார் அவனை தொடர்ந்து அப்படியே நடந்து கொள்ள சொல்கிறது
கடைசியில் அந்த ந்மபியாரால் அவனுக்கு என்ன ஆனது ? அவனுக்குள் இருக்கும் எம் ஜி ஆர் என்ன ஆனார் என்பதே இந்தப் படம் .
அடிப்படை கான்செப்ட் மிக சுவையான ஒன்று .
ஸ்ரீகாந்த் ஆர்வமாக நடித்து உள்ளார் . சந்தானம் வழக்கம் போல காமெடி செய்கிறார் .
கலாட்டா செய்யும் காட்சிகளில் ஸ்ரீகாந்துக்கு சந்தானத்தை டப்பிங் பேச வைத்து இருக்கும் இடத்தில் இயக்குனர் பாராட்டு பெறுகிறார்
விஜய் ஆண்டனி இசையில் சந்தானம் பாடி இருக்கும் ஆற அமர பாட்டின் இசை நன்று
எனினும் படம் பெரிதாக ஈர்க்கவில்லை .
காரணம் ஒரு யதார்த்தமான பிரச்னை உள்ள படத்தை படு செயற்கையாக இழுத்து இழுத்து சொல்லி இருப்பதுதான் .
எம் ஜி ஆர் சிலை பின்னணியில் ஒரு கிளைமாக்ஸ் என்பது என்பது எவ்வளவு பெரிய மாஸ் ஏரியா
அதை இப்படி சவசவ என்று சொல்லாமல் எமோஷனலாக பரபரப்பாக சொல்லி இருந்தால்
இந்த நம்பியார் வசூலில் எம்ஜியாராக இருந்து இருப்பார்