”யாருக்காகவும் பயந்து டைட்டிலை மாற்றாதீர்கள்”- ‘நுங்கம்பாக்கம்’ விழாவில் விஷால்

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் S.k.சுப்பையா தயாரிக்க,  அஜ்மல், ஆயிரா , மனோ,   A.வெங்கடேஷ், பென்ஸ் கிளப் சக்தி ஆகியோர் நடிக்க,

 திரைக்கதை அமைத்து  S.D.ரமேஷ் செல்வன் இயக்கும் படம்   ” நுங்கம்பாக்கம் “

நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி விவகாரத்தைப் பேசும் படம் இது . 

நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டராக,    சங்கர் என்ற கதாபாத்திரத்தில்  அஜ்மல்  நடிக்கிறார். A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப்     சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     :    ஜோன்ஸ் ஆனந்த்

இசை              :    ஷாம் டி ராஜ் 

கலை               :     ஜெய்சங்கர்

எடிட்டிங்         :     மாரி

தயாரிப்பு நிர்வாகம்  :     k.சிவசங்கர்

கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார். இவர் ஏற்கெனவே விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு மற்றும்  தற்காப்பு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.தயாரிப்பு: S.K.சுப்பையா

படத்தின் டிரைலர் வெளியீட்டு  விஷால் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன், ”நுங்கம்பாக்கம் உண்மையை உள்ளடக்கிய கற்பனை கதை.

நாம் எவ்வளவோ படங்களை பார்க்கிறோம் அந்தப் படங்களின் காட்சிகளில் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு இருக்கும்.

பாடல் காட்சிகளைத் தவிர மீதமுள்ள அனைத்து காட்சிகளுமே அந்தந்த இயக்குனரின் கற்பனைகள் மட்டுமல்ல.அவரவர்கள் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களின் தொகுப்பாகவும் கேள்விப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாகவும் இருக்கும்.

நுங்கம்பாக்கம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். அதில் கொஞ்சம் நிஜ சம்பவங்களும் கலந்திருக்கும்

நான் சினிமாவுக்கு வந்து எதையும் சம்பாதிக்கவில்லை நிறைய இழந்திருக்கிறேன். நிம்மதியையும் சேர்த்து ஜெயிக்ககணும்கிற வெறி இருக்கு

உழைக்கவும் செய்கிறேன் வெற்றி அருகில்தான் இருக்கிறது. அந்த வெற்றிக்கனியை இதில் பறிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நிறைய பிரச்சனைகளை இந்தப் படத்தில் நான் சந்தித்திருக்கிறேன் .. ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.

ஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..

எனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்

சென்சார் செய்யப் பட்டு U/A கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த தித்தீர் பிலிம்ஸ் k.ரவிதேவன் படத்தின் மொத்த உரிமையை பெற்றிருக்கிறார் “என்றார் .விழாவில் பேசிய விஷால், “ இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..

ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பதுதானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள்?

சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காக டைட்டிலை மாற்றினீர்கள் ?ஏன் பயப்படனும் ?

இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன்.

டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் “என்றார்

.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *