அமைச்சரை எதிர்க்கும் அறிமுக நடிகர்

kum4
2010ல் வெளியான தைரியம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் குமரன். அதனைத்  தொடர்ந்து வருஷநாடு மற்றும்  பல படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே  கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் யூனியன் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
kum 3
அதன் மூலம், தமிழ் நாட்டிலேயே குறைந்த வயதில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் பெற்றார் குமரன்.. 
யூனியன் தலைவராக இவர் பணியாற்றிய போது வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் நடத்தியதோடு, எளிதில் மக்கள் அணுக கூடிய தலைவராக இவர் இருந்தால்,
kum 1
மாவட்ட ஆட்சித் தலைவரால் பல முறை பாராட்டப்பட்டார், 
ஒரு நிலையில் அதிமுகவில் இருந்து விலகிய இவர்,  2003 ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் மாணவர் கட்சியைத்  தொடங்கி அதன் மாநிலத் தலைவர் ஆனார் குமரன். 
kum 5
இதன் மூலம் வட்ட,  மாவட்டக் குழுக்களை, தமிழ் நாடு முழுவதும் உருவாக்கி,  
மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு உயர் கல்விப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தார் .
இந்த நிலையில் நடைபெறவிருக்கும் 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர் மற்றும் மாணவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
kum 6
இவர்களுக்கு  பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதன் சிகரமாக சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா வை எதிர்த்து
kum 2
இளைஞர் மற்றும் மாணவர் கட்சியின் மாநில தலைவரான குமரன் போட்டியிடுகிறார்.
குக்கர் நல்லா  சமைக்கட்டும் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →