டைமன்ட் பாபு தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும் , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் (பி ஆர் ஓ யூனியன்) அமைப்பு,
திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் முக்கிய அமைப்பாகும் .
சினிமாவின் பல்வேறு துறைகளிலும் அனுபவம் பெற்றவர்கள் பணியாற்றும் அமைப்பு இது
இந்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும்முப்பெரும் விழா ஒன்று,
வரும் நாளை அதாவது ஜனவரி 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது .
தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆா். அவா்கள்,
திரு. பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களை “மக்கள் தொடா்பாளராக”நியமித்து திரை உலகிற்கு மக்கள் தொடர்பாளர் என்ற தொழிலை அறிமுகப் படுத்தியதன் 60 ஆம் ஆண்டு விழா…
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சங்கம் உருவாக்கி , 25 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் வெள்ளி விழா,
மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆகியவையே அந்த முப்பெரும் விழாக்கள் !
இந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, AVM சரவணன், சரத்குமார், சிவகுமார், பிரபு, விஷால், நாசர், மு க ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்
விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய 76 கலைஞர்கள் கெளரவிக்கப்பட இருக்கிறார்கள். இதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய கலைஞர்களில் கலைஞர் கருணாநிதியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அவரை நேரில் சென்று தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்க நிர்வாகிகள் விழாவிற்கு அழைத்துள்ளனர்.
கலைவாணர் எஸ் எஸ் கிருஷ்ணனின் பேத்தி ரம்யா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார் .
யூனியன் சார்பில் பல்வேறு பிரபலங்களின் கட்டுரைகள் அடங்கிய மல மலா் ஒன்றையும் வெளியிட உள்ளார்கள்
இசையமைப்பாளா் இன்னிசை வேந்தா் டாக்டா் (சங்கா்) கணேஷின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனா் கலா மாஸ்டா் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியைஅப்துல் ஹமீது மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள்
தமிழக கவா்னா், தமிழக முதல்வா், தமிழக துணை முதல்வா், தமிழக செய்தித்துறை அமைச்சா், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா்
மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகா் சங்கம்,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம், திரைப்பட இயக்குனா்கள் சங்கம் , திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம் ஆகியோர்க்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது .
இந்த விழா மிக சிறப்பாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம் .