ராஜாவுக்கு செக் @ விமர்சனம்

சோமன் பல்லேட், தாமஸ் கோக்கட் தயாரிப்பில் சேரன் நடிப்பில் சாய் ராஜ்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் . 

ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்கிற — கார் ஓட்டும் நேரம் உட்பட எந்த நேரத்திலும் சட்டென்று தூக்கத்தில் விழுந்து மாதக் கணக்கில் கூட தூங்குகிற             ( விஷால்  நடித்த நான் சிகப்பு மனிதன் ஞாபகம் வருதா?) குறைபாடு உள்ள- போலீஸ் அதிகாரி ராஜா செந்தூர் பாண்டி ( சேரன்) .

மேற்படி பிரச்னை காரணமாகவே விவாகரத்து கோரும் மனைவி கவுரி ( சரயு மோகன்). இருதலைக் கொள்ளி எறும்பாய்  பாசமுள்ள மகள் கீர்த்தனா (நந்தனா வர்மா ) . 

விவாகரத்து  தீர்ப்பாகி மகளொரு மனைவி அமெரிக்கா போகப் போகும் நிலையில் கடைசி பத்து நாள் மகளோடு கழிக்க திட்டமிடுகிறார் பாண்டி . கடுகடு மனைவியும் பல்லைக் கடித்துக் கொண்டு அனுப்பி வைக்கிறாள் .

மகள் வீட்டுக்கு வந்த நிலையில் ஓர் ஆபத்து . 

காம வெறி இளைஞர்கள் சிலரிடம் இருந்து ஒரு இளம்பெண்ணை ( சிருஷ்டி டாங்கே) சில வருடங்களுக்கு முன்பு  பாண்டி காப்பாற்றி , குற்றவாளிகளை  தண்டிக்க, 

தண்டனை முடிந்து வெளிவந்த குற்றவாளிகளின் தலைவன் ( இர்பான்) , பழிவாங்கலாக காதல் என்ற பெயரில்  பாண்டியின் மகளை ஏமாற்றி கடத்திப் போய் இருப்பது புரிகிறது . 

அவர்கள் கீர்த்தனாவை சிதைப்பதை , ஆன் லைன் மூலம் பாண்டியை பார்க்க வைத்து சித்திரவதை செய்ய முயல,  அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் . 
குடும்ப செண்டிமெண்ட் , சமூக அக்கறை என்று இரண்டு பகுதிகளில் பயணிக்கும் படம் . ‘முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் எல்லோருமே நல்லவராகத்தான் இருப்பார்கள் . நலவராகத்தான் காட்டிக் கொள்வார்கள்’ என்பதை  பிரச்சாரமாக இல்லாமல் கதையின் வழியே சொல்கிறார் இயக்குனர் . பாராட்டுகள் . 
 மாற்றுத் திறனாளியின் சைகை மொழி, சிருஷ்டி டாங்கே கதாபாத்திரம் இவற்றின் மூலம் சில சுவாரஸ்யமான திருப்பங்கள் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன . சிறப்பு . 

பொருத்தமாக நடித்துள்ளார் சேரன் . அவருக்கு இருக்கும் சமூக மதிப்பீடு இந்த கதாபாத்திரத்துக்கு அவரை சிறப்பாக பொருத்துகிறது . நந்தனா வர்மா குழந்தைத்தனத்தில் ஜொலிக்கிறார். அருமை . 

மற்றவர்கள் ஒகே  ரகம். 

எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கான சூழல் உணர்வை சிறப்பாக கொண்டு வருகிறது . 

பிரேமின் படத் தொகுப்பு இருக்கிற விசயங்களை சிந்தாமல் சிதறாமல் தொகுக்கிறது.இசையமைப்பாளர் வினோத் எஜமான்யா… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் எசமான் !
ஒவ்வொரு விசயத்தையும் சொல்ல அதிகப் படியான  வார்த்தைகளை வாக்கியங்களை எடுத்துக் கொள்வது பெரிய சுமையாக இருக்கிறது . 

ஓரிடத்தில் அடுத்த ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய கதைப் போக்கை அடுத்து அரைமணி நேரம் இழுத்துப் போகிறார்கள் . 

விளைவு ?

ஆரம்பித்த  குடும்பக் கதையை முடிக்காமல் விட்டு விடுகிறார்கள் . இல்லை இந்த  விசயத்தில் படத்தை முடிப்பதுதான்  இயக்குனரின் நோக்கம் என்றால் , அதற்கான பட  ஆரம்பம் இது அல்ல .

மொத்தத்தில் ராஜாவுக்கு செக்..  பாதி கட்டங்களில் திக் திக் …  மீதி  கட்டங்களில்  ரொம்ப வீக் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *