நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் வழங்க , மகேஸ்வரி சத்யராஜ் தயாரிக்க ,
சிபிராஜ், ரம்யா நம்பீசன் , யோகி பாபு, சதீஷ் , நிழல்கல் ரவி நடிப்பில் – சைத்தான் படத்தை இயக்கிய –
பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி இருக்கும் படம் சத்யா . சத்தியமா ரசிகன் நம்பலாமா ? பார்க்கலாம் .
வெளிநாட்டில் வாழும் சத்யாவுக்கு தனது முன்னாள் காதலியிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வருகிறது.
சென்னை வந்தால் ”எனது குழந்தை காணாமல் போய் விட்டது . கண்டு பிடித்துக் கொடு” என்கிறாள் .
தேடினால் அவளது கணவன், போலீஸ் , உறவுகள், ஊர் , சமூகம் எல்லாமே ”அவளுக்கு குழந்தையே இல்லை . அவள் ஒரு மன நோயாளி” என்கிறது .
ஒரு நிலையில் இவனும் அதையே நம்ப , ஒரு விபரீத இழப்பு நிகழ்கிறது . அதன் பிறகு சத்யா சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களே சத்யா . .
தெலுங்கில் வந்த க்ஷணம் படத்தின் மறு உருவாக்கம் .
ஆரம்பக் காட்சியே மிரட்டுகிறது .
படமாக்கல் சிறப்பு . அந்த வகையிலும் ரம்யா நம்பீசனிடம் இருந்து கியூட்டான முக பாவனைகள் வாங்கிய விதத்திலும் அசத்துகிறார் இயக்குனர்
“சும்மா நடிக்காத … “- யோகி பாபு
“எனக்கு நடிப்பு வராது ” – சிபி
“அதான் ஊருக்கே தெரியுமே ” — யோகி பாபு .
இந்த வசனத்துக்கு தியேட்டரே குபீர் என்று சிரித்தாலும் முதன் முதலாக அட்டகாசமாக நடித்துக் கவர்கிறார் சிபி சத்யராஜ் . சூப்பர் . நுணுக்கமான அசைவுகள் கூட சிறப்பாக வந்துள்ளது
கொஞ்சம் காமெடி நிறைய சீரியஸ் கலந்த வேடத்தில் சதீஷ் . இனி தப்பிச்சுக்குவீங்க சதீஷ் .
அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு சிமோன் கே எஸ் இசை (குறிப்பாக பின்னணி இசை ) ஆசம் அட்டகாசம் !
ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசனை ஏரியில் பர பரவென பயணிப்பதால் கரை சேர்க்கிறது சத்யா படகு .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462