அந்தக் கேள்விதான் படத்தின் கதை.
அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் , அவரது மகள் ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் தயாரிக்க, அதே மலர்விழி நடேசன் இயக்ககத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிகா , பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஸ் காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிக்னல் அட் 11:30 .
ஒரு பயணத்தில் ஒருவருக்கு ஒரு டிராபிக் சிக்னலில் நடக்கும் ஒரு சம்பவத்தால் நடக்கும் தொடர் நிகழ்வுகளே படத்தில் கதை என்கிறார் மலர்விழி.. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் (அப்புறம் என்ன… எத்தனை படம் வேணுமானாலும் எடுக்கலாம்)
ஆரம்பத்தில் தயாரிப்பாளராக ஒரு படத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் இவரையே டைரக்டர் ஆக்கி விட்டதாம்.
” ஒரு நாள் நான் சென்னையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தபோது,, உத்தண்டி சிக்னலில் ஒரு சம்பவம் நடந்தது. தொடர்ந்து நான் காரை ஓட்டிக்கொண்டே அந்த சம்பவத்தின் தொடர்ச்சி இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்தபோது உருவான கதைதான் இது. வித்தியாசமான சம்பவங்கள் நிறைந்த கதை. இது ஒரு திரில்லர் படம். படத்தின் நாயகன் கேரக்டருக்கு சந்தோஷ் பிரதாப் பொருத்தமாக தோன்றியதால் அவரை ஒப்பந்தம் செய்தேன்.
அவரும் பவ்யா ட்ரிகாவும் நன்றாக நடித்துள்ளனர். பூஜிதா பொன்னாடா ஒரு காதல் பிளாஷ்பேக்கில் வருகிறார். இமானின் இசை, ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு படத்துக்கு பலமாக இருக்கிறது ” என்றார்.
சந்தோஷ் பிரதாப், “எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர், சிக்னலில் நடக்கும் கதை என்று சொன்னாரே, அந்த சிக்னல் காட்சி எடுக்கும்போது அவ்வளவு தடைகள்… இரண்டு முறை மழை வந்து நின்றுபோனது. ஒரு முறை போலீஸ்காரர்கள் பிரச்னை. இன்னொரு முறை லோக்கல் ஆட்கள் பிரச்னை . இப்படி பல முறை முயன்றுதான் அந்த காட்சியே எடுக்க முடிந்தது. ” என்றார்,
”கதையில் ஹீரோயின் கேரக்டருக்கு நல்ல ஸ்கோப் இருந்தது. நடிக்கும்போது உற்சாகமாக இருந்தது ” என்றார் பவ்யா
இன்னொரு தயாரிப்பாளர் ஷிவானி சுப்பிரமணி, ” நான் ஜெர்மனியில் படித்துக் கொண்டு இருந்தேன் ஒருமுறை ஊருக்கு வந்தபோது, அம்மா என்னை பிளைட்டில் இருந்து நேரே அழைத்துக் கொண்டு போனது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு. அப்போதுதான் எனக்கு விஷயமே தெரியும். படித்து முடித்த பின்னர் நானும் தயாரிப்பில் அம்மாவோடு இறங்கி விட்டேன்” என்றார்.
ரிலீஸ் ஆன் நெக்ஸ்ட் மன்த் என்கிறது சிக்னல் அட் சிக்னல் அட் 11:30