அம்புலி, ஆ, ஜம்புலிங்கம்3D போன்ற படங்களின் வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் கவர்ந்த இரட்டை இயக்குனர்களான ஹேரி – ஹரீஷின் இயக்கத்தில்,
வித்தியாசமான ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கியதோடு சிறந்த நடிகராகவும் சாதித்த நாட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் நடிப்பில்,
ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு உருவாகும் படம் சில்க்.
திரில்லர் படத்துக்கு இது வழக்கத்துக்கு மாறான தலைப்பு இல்லையா. என்று இயக்குனர்களிடம் கேட்டால் ,
” உண்மைதான் . படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது.
இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை,
சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்கிறார்கள்.
இந்த சில்க்கும் கவர்ந்து இழுக்கட்டும் !