லூசியா இயக்குனரின் ‘யூ டர்ன்’

ஸ்ரீனிவாசா  சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர் கிரியேஷன்ஸ் சார்பில், 
 
ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருக்கும் படம் ‘யு-டர்ன்’. 
 
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. 
 
கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமாரே இயக்கியிருக்கும் இந்த படத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க,
 
ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 
செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்பை, 
 
கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார்.
 
 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  இயக்குனர் சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
 
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பவன் குமார்.”இந்த யு-டர்ன் கன்னடத்தை விட மேம்பட்ட வடிவமாக இருக்கும்.
பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கிறது. 
 
தமிழ், தெலுங்குக்கு ஏற்ப திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். கடைசி 30 நிமிடங்கள் மிகவும் திரில்லாக இருக்கும். 
 
கன்னட படம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோதே சமந்தா என்னிடம் பேசினார். அவருக்காக தான் இந்த ரீமேக் படத்தையும் நானே இயக்க ஒப்புக் கொண்டேன். 
 
சமந்தா, ராகுல் ஆகியோரிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் ரசிகர்கள், 
பல நல்ல சினிமாக்களை பார்த்தவர்கள், இந்த படத்தையும் அங்கீகரிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் 
 
“பவன் குமாரின் லூசியா தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது அதிலும் நான் நடித்தேன், இன்று அவர் இயக்கத்தில்
 
தமிழிலேயே நடித்தது மகிழ்ச்சியான விஷயம். சமந்தா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
தெலுங்கு வசனங்களில் நான் தடுமாறும் போது எனக்கு ஆதி உதவியாக இருந்தார்” என்றார் நடிகர் ஆடுகளம் நரேன்.நடிகர் ராகுல் ரவீந்திரன். பேசும்போது, ” நான் ஒரு சென்னைப் பையன். தமிழில்தான் அறிமுகம் ஆனேன். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்தது மகிழ்ச்சி.
 
இயக்குனர் பவன் ரொம்ப தெளிவானவர், அவருக்கு என்ன தேவையோ அதை சரியாகக் கேட்டு வாங்குவார்.
 
10 வருடங்கள் கழித்து சமந்தாவுடன் மீண்டும் நடிக்கும்போது அவர் ஒரு சிறந்த நடிகையாக உருவாகியிருப்பதை பார்க்கிறேன்.
 
படத்தின் கடைசி 30 நிமிடங்கள் நிறைய மாற்றியிருக்கிறார், நிறைய ட்விஸ்ட் இருக்கு” என்றார் 
நடிகர் ஆதி. தனது பேச்சில் , “வாழ்வில் சில விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்போம், ஆனால் சினிமாவில் நல்ல கதைகள் நம்மைக் கேட்கும்போது நடித்து விட வேண்டும்.
 
குறைந்த பட்ஜெட்டில் மிகச்சிறப்பான படத்தை கொடுப்பது என்பதுதான் மிக சவாலான விஷயம்.
 
அதனால்தான் ‘பவன் குமார் படம் நடிக்கிறீங்களா?’  என கேட்டவுடனேயே அவருக்காகவே நடிக்க ஓகே சொன்னேன்.
 
சமீப காலங்களில் காக்கா முட்டை, அருவி போன்ற படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அது மாதிரியான ஒரு படம் தான் இது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
அடுத்து 3 தமிழ் படங்களில் நடிக்க போகிறேன், அடுத்த இரண்டு வருடங்கள் சென்னைல தான் இருக்க போறேன்” என்றார் 
 
சமந்தா  பேசும்போது , “ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
 
இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை.
 
அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம்.
எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார்.
 
இப்போது பாதுகாப்பான கைகளில் இந்தப் படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை.
 
அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது.
 
கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன்” என்றார்
 
தயாரிப்பாளர் தனஞ்செயன் தந்து பேச்சில், “நான் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க முயற்சித்தேன். ஆனால் அதை வாங்க முடியவில்லை.
 
எப்படியாவது இந்த படத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என நினைத்தேன். அதுதான் இந்த படத்தை என்னை  ரிலீஸ் செய்ய வைத்திருக்கிறது.
 
சமந்தா இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது. புது விதமான, சீரியஸான சமந்தாவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்.
சமந்தா நடித்த சமீபத்திய படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி வருகின்றன. இந்தப் படமும் நிச்சயம் நல்ல வசூலைக் கொடுக்கும்.
 
இந்த படத்தின் ஒரிஜினல் கன்னட பதிப்பை 10 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன், எல்லா கதாபாத்திரங்களுக்கும்,
 
சமமான முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருந்தார்கள். அது தான் படத்தின் ஹைலைட்.
 
இந்த படத்தில் அதை விடவும் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள்” என்றார் .
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *