விஜய் சேதுபதி சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் & KGISL Educational Institutions  கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் (2022- டிசம்பர் 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி)  மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் கோவை மாநகரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமின் நோக்கம் 3 நாட்களில் 20000+ இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவுவது.
 
 விஜய் சேதுபதி பல நற்பணிகளும் செய்து வருகிறார் மேலும் அவரது வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடி தரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது கோவை மாநகரில் பிரமாண்டமாக இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் இந்தியாவை சார்ந்த அனைவரும் பங்கு பெற்று பயன்பெறலாம் 
 
இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 2022- டிசம்பர் மாதம் 2,3,4 ஆம் தேதிகளில் மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 22 Sector-ஐ சேர்ந்த,  200+ நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 20000+ வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை தேடும் இளைஞர்கள் / நிறுவனங்கள் http://jobfair.vvvsi.com எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பை பெற்று பயன்பெறலாம். இதில் எந்த கட்டணமும் இல்லை முழுக்க சமூக சேவையாகவே நடைபெறுகிறது.
 
கடந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம்  நடத்திய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சேரியில் 50 நிறுவனங்களுடன் ஆயிரத்திற்கும் மேலான வேலை தேடும் நபர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இந்த சேவை ஒருநாள் வேலை வாய்ப்பு சேவையாக அல்லாமல், வருடத்தின் அனைத்து நாட்களும் இந்த இயக்கத்தின் சேவை மக்கள் செல்வன் வழியில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம்  இது நாள் வரை 1,20,243 நபர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *