அதிதி @ விமர்சனம்

film review
review
திடீர் திகில்

இங்கிலாந்து-கனடா கூட்டுத் தயாரிப்பாக 2007-ம் வருடம் வந்த படம் ‘Butterfly on a Wheel’ ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிரான்ஸன் தனது ஹீரோயிசத்தை கடந்து அந்தப் படத்தில் ஒரு வில்லத்தனமான கேரக்டரை செய்திருந்தார்.

இதே கதை 2010-ம் ஆண்டு ‘காக்டெயில்’ என்ற பெயரில் மலையாளத்தில் ஜெயசூர்யா, அனூப் மேனன், சம்விருதா சுனில், பகத் பாஸில், இன்னசென்ட் நடிக்க அருண்குமார் இயக்கத்தில் வந்தது தயாரித்து வெளியிட்டார்கள். கதைக்கான இடத்தில் ஒரிஜினல் கதாசிரியரான William momssey-யின் பெயர் இடம் பெற்றிருந்தது.இப்போது 2014-ல் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை மலையாளத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று அழகிய தமிழ் மகன்’ படத்தின் வசனகர்த்தா வான பரதன் இயக்கத்தில் அதிதி ஆக்கி ஆக்கி இருக்கிறார்கள்.

அழகான, அமைதியான இல்லற வாழ்க்கையில் இருக்கும் ந்ந்தா மற்றும் அன்ன்யாவின் வாழ்க்கையில் நிகேஷ்ராம் மின்னலாய் நுழைகிறார். கையில் துப்பாக்கி. அவருடைய செல்போனின் மறுமுனையில் தம்பதிகளின் ஒரே மகளின் உயிர். இனி நிகேஷ் சொல்வதைத்தான் இந்த்த் தம்பதிகள் கேட்க வேண்டும்.. மறுத்தால் மகளின் உயிர் போய்விடும். நிகேஷ் கேட்பதையெல்லாம் செய்கிறார்கள்.. சொல்கிறார்கள்.. தருகிறார்கள். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!

நந்தா நன்று . ஆனால் இந்தா இந்தா என்று சொல்வது போல, மலையாள ஜெயசூர்யா கேரக்டரில் தமிழில் நிகேஷ்ராம். அடக்கமான, ஆக்ரோஷமான, அழுத்தமான கேரக்டரை பதிவு செய்திருக்கிறார்.அனன்யா அடக்கி வாசித்து நடித்திருக்கிறார்.மலையாளத்தில் இன்னசென்ட் செய்த கேரக்டரில் தமிழில் தம்பி ராமைய்யா! காரில் செல்லும்போது நிகேஷ் பற்றி அவிழ்த்து விடுவதும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாட்டிலை வாங்கிவிட்டு பின்பு திருப்பிக் கொடுக்க அல்லல் படுவதும் அருமை

திரைக்கதை பிரதானமாக உள்ள படத்தில் பல இடங்களில் பலவீனமாக பயணிக்கிறது திரைக்கதை.

கிளைமாக்ஸ் படு அதிர்ச்சி . இறைவா! இதெல்லாம் சினிமாக் கதையில் மட்டுமே நடக்கட்டும் .

அதிதி .. அடி ஆத்தி !

About Senthilkumaran Su

பெயர் சு.செந்தில் குமரன் புனைப் பெயர் ராஜ திருமகன் கல்வித் தகுதி B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Senthilkumaran Su →