GV பிரகாஷ் குமார் + கௌதம் வாசுதேவ் மேனன் =13

Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்க , GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம்  “13” 
 
ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில்,  Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். 
ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.
 
சித்து குமார் இசையமைக்க, CM மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். JF காஸ்ட்ரோ எடிட்டராகவும், PS ராபர்ட் கலை இயக்குனராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறரகள். தொழில்நுட்பக் குழுவில், ஆடை வடிவமைப்பாளர்- ஹினா (கொலைகாரன், பாக்ஸர், முன்னறிவாளன், கோட்டேஷன் கேங் புகழ்), ஸ்டண்ட் மாஸ்டர் – ரக்கர் ராம் (மரகத நாணயம், சிக்சர், ஓ மை கடவுளே, பிசாசு 2, சட்டம் என் கயில், பீட்சா 3), நடன இயக்குனர் – சந்தோஷ் (மேயாத மான், நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, சிறை), ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *