418 @ விமர்சனம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் ஏர்னெனி , ரவிசங்கர் எலாமஞ்சிலி தயாரிக்க,சைத்ரா ஆச்சார்,சூரியராஜ் வீரபத்தினி , சரண் லக்கராஜு, ரமேஷ் இந்திரா, பிரீத்தி பகதாலா,  ரேகா நிரோஷா, சஷாங்க் பாட்டீல் நடிப்பில் கீர்த்தன் நடகவுடா இயக்கி கன்னட சினிமா உலகினரால் தெலுங்கு கன்னடத்தில் உருவாகி தமிழிலும் இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு  இருக்கும் படம்.  

கே ஜி எப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் வழங்கும் படம் இது. 

 
கடன் வாங்கி மகனை( சூரியராஜ் வீரபத்தினி )  மெடிக்கல் காலேஜ் படிக்க வைக்கும் பெற்றோர்,  அவனை  ஒரு வில்லங்கமான மெடிக்கல் காலேஜில் சேர்த்து விடுகின்றனர்.கல்லூரியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் உள்ள 418 ஆம் எண் கொண்ட  ஓர் அறையை பதினைந்து வருடங்களாக பூட்டியே வைத்து இருக்கிறார்கள். 
 
காரணம் அங்கே இருந்த ஒரு பெண் அமானுஷ்யம்  புகுந்து,  பெண்களாக பார்த்து கொடூரமாக கொன்று இருக்கிறாள். எனவே அந்த கட்டிடத்துக்குள் பெண்கள் யாரும் போவதே இல்லை . 
 
அதன் பக்கத்தில் உள்ள அறையில் படிக்க வந்த மாணவன் தங்கி இருக்க, அவனையும் அந்த  சக்தி கொலை செய்ய முயல்கிறது. தனது நண்பனின் (சரண் லக்கராஜு) உதவியோடு  கல்லூரி மனநல மருத்துவரை (ரமேஷ் இந்திரா) சந்திக்கிறான் பாதிக்கப்பட்ட மாணவன் 
 
அவர் அங்கே இருக்கும் அமானுஷ்ய சக்தியின் கதையை கூறுகிறார். 
 
கன்னட நாட்டுப்புறக் கலைஞரான ஓர் அநாதை இளம்பெண்ணை ( சைத்ரா ஆச்சார்) ஒருவன் காதலிக்கிறான். கல்யாணம் செய்து கொள்கிறான். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள் 
 
அவள்  கர்ப்பமான நிலையில் அவள் வயிற்றில் குழந்தை தங்காது என்ற நிலை. ஆனால் அவளது  உறவுகளுக்கு குழந்தை பிறப்பது அவளை உறுத்துகிறது. 
 
இந்நிலையில் அவளை ஒருவர் ஒரு துர்தேவதையிடம் அழைத்துச் செல்கிறான். அந்த துர்தேவதை  ”ஆறு பெண்களை கொன்றால் உனக்கு பெரும் சக்தி கிடைக்கும்” என்கிறார். 
 
மூன்று பெண்களை கொன்ற நிலையில் அந்த அமானுஷ்ய சக்தி  மேலும் சிலரை கொல்ல இருப்பதாகவும் அந்த அமானுஷ்ய சக்தி பொருத்தமான உடலில் புகுந்து விட்டால் அப்புறம் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மனநல மருத்துவர்  கூறுகிறார். 
 
 கல்லூரியில் படிக்கும் சகமாணவி( பிரீத்தி பகதாலா)  அந்த அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ள , நடந்தது என்ன என்பதே இந்த 418 படம். 
 
ரொம்ப  குழப்பமான  எந்த ஒழுங்குக்கும் அடங்காத  பித்துக்குளித்தனமான  திரைக்கதை. 
 
கே ஜி எப் படங்கள் மூலம் அநீதியை குளோரிஃபை செய்யும் குரூர வன்முறையை பிரபலப்படுத்தி,  தென்னிந்திய சினிமாவையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய  பிரஷாந்த் நீல் , இப்போது பெண்களை வைத்து அதே மாதிரி இன்னொரு மோசமான ரூட்டை கையில் எடுத்து   இருக்கிறார். 
 
சைத்ரா ஆச்சார் சிறப்பாக நடிக்கிறார். 
 
பெரிய கண்கள், லோ ஹிப் மேல் ஏறி நிற்கும்  குறுந் தொப்பை அல்டசியமான நடையுடை பாவனைகள் என்று ஈர்க்கிறார்  பிரீத்தி பகதாலா.
 
ரமேஷ் இந்திரா கவனிக்க வைக்கிறார். 
 
மற்றபடி நடித்தவர்கள் பலரும் நரம்பு புடைக்க, முடி சிலிர்க்க ஓவர் ஆக்டிங்கில் கத்துகிறார்கள். 
 
தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு , வெங்கியின் இசை , அகுல்  அவினாஷ் படத் தொகுப்பு, அனுபம் கொடுத்திருக்கும் ஒலி வடிவமைப்பு இவையே படத்தின் பலம் 
 
ஆனால் ஓவராக குழப்பும் திரைக்கதையால் படத்தின் ஒலி அளவு கடுப்பேற்றுகிறது. 
 
கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அந்த குழந்தையே நீங்கதான் சார் பாணியில் இருக்கிறது. ஆனால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.  கால அளவும் குழப்புகிறது. 
 
படம் முடியும்போது விட்டால் போதும் என்று இருக்கிறது 
 
மொத்தத்தில் 418…… 000 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *