தமிழுக்கும் வரும் கன்னட ’45’ திரைப்பட டீசர் வெளியீட்டு விழா

SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும்  எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட நடிகர்   சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில்,  ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னடத்  திரைப்படம் 45. 
 
பெரும் பொருட் செலவில்  ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. 
 
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடகங்கள்  முன்னிலையில்  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா பேசியபோது, ” சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை பார்க்கிறேன், சென்னை வந்தாலே எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் நினைப்பு தான் ஞாபகம் வரும். அவர்களின் தீவிர ரசிகன் நான். என் படம் தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. இந்தக் கதையை ரெடி செய்தவுடன் சிவாண்ணாவிடம் சொன்னேன், நீயே இந்தப் படத்தை பண்ணு என அவர் தான் உற்சாகப்படுத்தினார்.
 
இந்தத் திரைப்படம் பொறுத்தவரை, படம் எடுக்கும் முன், ப்ரீ விஷுவலாக ரெடி செய்யலாம் என நினைத்தேன். ஸ்டோரி போர்ட் மாதிரி, கார்டூனில், முழுதாக 2 1/2 மணி நேரம் ரெடி செய்து, அதை எடிட் செய்து, சிஜி செய்து, மியூசிக் போட்டு, டிடிஎஸ் செய்து காட்டினேன். சிவாண்ணா சந்தோசப்பட்டார். இதில் என்ன வசதி என்றால், படமெடுக்கும் போது வேஸ்ட்டாக ஒரு ஃப்ரேம் கூட எடுக்க தேவையில்லை, எல்லாமே தயாராக இருந்தது. எடிட்டிங் கூட வேலை இல்லை. இதை இந்திய திரைத்துறையில் முதல்முறையாக நான் செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. உபேந்திரா சார் மிக உற்சாகமாக நடித்துத் தந்தார். ராஜ் பி ஷெட்டி அருமையான ரோல் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் இசையமைப்பாளர் தான் ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை.  “என்றார். 
 
நடிகர் டாக்டர் சிவராஜ்குமார்  பேசியபோது, ” சென்னை எப்போது வந்தாலும் எனக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். நான் பிறந்து, படிச்சு, வளர்ந்தது இங்கு தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் இருக்கிறது. நான் சென்னையில் இருந்தபோது தான், எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை, ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட். நானும் சினிமாவுக்கு வந்தேன், நிறைய தோல்வி, நிறைய வெற்றி பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
 
வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன், இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள்.  இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், எனக்கு கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன். நாங்கள் மூன்று பேரும் மிக அருமையாக நடித்துள்ளோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது புதுமையான அனுபவமாக இருக்கும். ஒரு முழுமையான எண்டர்டெயினிங் படமாக இது இருக்கும்.”என்றார்.  
 
உபேந்திரா  பேசியபோது, “இயக்குநர் அர்ஜுன் மிகப்பெரிய இசையமைப்பாளர், இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவர் கதை சொன்ன போதே, அவ்வளவு பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பாக இதை இயக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினேன். தயாரிப்பாளர் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி அருமையாக நடித்துள்ளார். டார்லிங் சிவாண்ணாவுடன், நானும் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.”என்றார். 
 
தயாரிப்பாளர் எம் ரமேஷ் ரெட்டி பேசியபோது,”இந்தத் திரைப்படம் முழுக்க இயக்குநர் அர்ஜுன் தான் சூத்திரதாரி. அவர் இந்தப் படத்திற்காக ஒரு வருடம் உழைத்தார். இது பான் இந்தியா படமில்லை. இது இந்தியப் படம். இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெரிய பட்ஜெட்டில், சிஜி எல்லாம் செய்து, மிகப்பெரிய உழைப்பைத் தந்து உருவாக்கியுள்ளோம். சிவாண்ணா, உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். படம் அட்டகாசமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் “என்றார் 
 
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 
 
தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 
 
ஒளிப்பதிவு : சத்யா ஹெக்டே 
எடிட்டர்: கே எம் பிரகாஷ் 
சண்டைக்காட்சிகள்: டாக்டர் கே ரவிவர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃபரண்ட் டேனி, சேத்தன் டிசோசா
நடன இயக்குனர்: சின்னி பிரகாஷ், பி தனஞ்சய்
வசனங்கள்: அனில் குமார் 
தயாரிப்பு மேலாளர்: ரவிசங்கர் 
தயாரிப்பு பொறுப்பு: சுரேஷ் சிவன்னா 
கலை இயக்குனர்: மோகன் பண்டித் 
ஸ்டில்ஸ் : ஜி பி சித்து 
இணை இயக்குனர்: மஞ்சுநாதா ஜம்பே 
மோஷன் கிராபிக்ஸ்: பிரஜ்வல் அர்ஸ் 
ஒப்பனை: உமா மகேஷ்வர் 
உடை வடிவமைப்பு : புட்டராஜூ 
மக்கள் தொடர்பு : Aim சதீஷ், சிவா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *