ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திச் சண்டை போன்ற படங்களைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரிக்க,
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக திரிஷா நடிக்க, மற்றும் காளிவெங்கட் வினோதினி உடன் நடிக்க,
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் முதல் எய்தவன் வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார்மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘96 ‘
படத்தின் துவக்க விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம்,
இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படம் பற்றிக் கூறிய இயக்குனர் பிரேம்குமார் “96 ஆம் ஆண்டு பிளஸ் தடையாய் முடித்த சிலரின் வாழ்வும் காதலும் இந்தப் படம் .
அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் ,
பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.” என்றார் .
விஜய் சேதுபதி “நான் இந்தப் படத்தில் வனவியல் புகைப்படக்காரராக நடிக்கிறேன் .
ஒரு ரசிகனாக நான் திரையில் பார்த்து ரசித்த திரிஷாவுடன் ஜோடியாக நடிப்பது சந்தோஷமான விஷயம் . ” என்றார் .
“படத்தின் கதையை கேட்டு முடித்த உடன் ஒரு துளி கண்ணீர் என்னை அறியாமல் வந்தது . அதே கண்ணீர் படம் பார்க்கும் அனைவர் கண்ணிலும் வரும் .
விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக ஜோடியாக நடிக்கிறேன் . மிக சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் திரிஷா.





