அம்மா சித்தர் என்று அழைக்கப்படும் ஆத்ம லட்சுமி அம்மா சென்னைக்கு வந்திருந்தார் .
சென்னை வடபழனி சிகரம் ஹாலில் ஆன்மீக உரையாற்றி பக்தர்கலின் குறைகள் கேட்டு அருளாசி வழங்கினார் .
சிவகங்கை மாவட்டம் பரமக்குடி முத்து ராமலிங்க சேதுபதி ராஜா குடும்பத்தில் இருந்து வந்த இவரது இயற்பெயர் ஜெயலக்ஷ்மி .
சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் வந்த ஈடுபாடு காரணமாக சித்தர்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார் .
ஸ்ரீ ரகு நந்த சாமி குருகுரு தேவர், கொல்லிமலை ஜடையம்மா, சாய் நாத் கந்தோபவா , கோதண்டசாமி சாஸ்திரிகள் மற்றும் குறு சீத்தாராம் பாவா ஆகியோரிடம் தீட்சை பெற்று ஆன்மீக பலம் பெற்றார் .
காசி, ஹரித்வார், ரிஷிகேஷ், கேதாரிநாத், பத்ரிநாத், கைலாஷ் , கங்கோத்ரி, ஹிமாலயா , ஜம்மு காஷ்மீர், ஜகன்னாத் பூரி, காமோத்யா, உஜ்ஜயினி ஆகிய இடங்களில் தவம் செய்து சக்தி பெற்றார் .
புவி வாழ்வில் கர்மவினைகளால் துன்புறும் மக்களை தன் பிள்ளைகளாக பாசம் காட்டும் இவர் ஆன்ம சக்தியைத் தூண்டி அவர்களுக்கு நன்மை செய்கிறார் . தான் ஜீவா சமாதி ஆகும்வரை இவர் இதை செய்வார் .
தியானம் மற்றும் தவம் மூலம் ஆன்மாவை உணரும் இவர், அந்த ஆன்ம சக்தியின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்க்கிறார் என்கிறார்கள்
