ரீல் பெட்டி தயாரிப்பில் தயாரித்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, சைதன்யா பிரதாப், அனந்த நாக், கவுரவத் தோற்றம் அருண் பாண்டியன் நடிப்பில் சுனில் தேவ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
அதோ முகம் என்றால் மறைந்திருக்கும் முகம் என்று பொருள், இது சிவனுக்கு உரிய பெயர்
பணக்கார நண்பனின் எஸ்டேட் ஒன்றில் ஊட்டியில் பணியாற்றும் இளைஞன் சித்தார்த்) பொழுது போக்காக , மறைந்த முகம் என்ற செயலியை மனைவியின் (சைதன்யா) செல்போனில் பொருத்தி தனது போனோடு தொடர்புப்படுத்தி , அவளுக்கே தெரியாமல் அவளது கேமராவை இயக்கி , அவளைத் தொடர்ந்து அவள் இல்லாத பொழுதுகளில், பொழுது போக்காக பார்த்து ரசிக்கிறான்

பக்கத்து எஸ்டேட் ஓனர் ஒருவர் தன் எஸ்டேட்டுக்கு வேலைக்கு வரும்படி அவனை வற்புறுத்துகிறார் . அவன் மறுக்க, இதன் விளைவுகளை நீ அனுபவிப்பாய் என்று மிரட்டுகிறார் . ஓனர் நண்பனிடம் சொல்லி விட்டு இவன் வழக்கம் போல இருக்க, அவன் மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதை செல்போன் செயலி மூலம் கண்டு பிடிக்கிறான் .
ஒரு நிலையில் அதன் மூலமே , அவர்கள் தன்னை கொலை செய்ய முயல்வதை அறிய , நடந்தது என்ன என்பதே படம்.
வித்தியாசமான கதை
செல்போன் செயலி மூலம் மனைவியை பார்க்கும் காட்சிகளில் அவளது செல்போன் கோணங்களாக வரும் காட்சிகள் அருமை

இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமாருக்கும் வாழ்த்துகள்
மிகக் குறைவான நடிக நடிகையர், அட்டகாசமான ஷாட்கள், அருமையான லொக்கேஷன் என்று படத்தின் முதல் பாதி , “குறைந்த செலவில் நிறைந்த சினிமா” என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது.
ஆனால் இரண்டாம் பாதியில்தான் வித்தியாச டுவிஸ்ட் என்று சவ சவ காட்சிகள், லாஜிக் மீறல் சம்பவங்கள் , முடிந்து முடியாத பாதி கிளைமாக்ஸ் , அதில் இரண்டாம் பாகத்துக்கு லீடு என்று தறிகெட்டுப் போய்விடுகிறது படம.
எனினும் அந்த அட்டகாசமான முதல் பாதி காட்சிகள் அட சொல்ல வைக்கின்றன .