ஹாரர் ‘பலூன்’

70MM Entertainment நிறுவனம் சார்பில் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி தயாரிக்க, ஆரா சினிமாஸ் மகேஷ் வெளியிட, 
 
ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி  நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில்  சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. 
 
படத்தின் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்  நடந்த ட்ரைலர்  வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கந்தசாமி நந்தகுமார், 
 
”சினிமாவில் எனது முதல் படம் இது .  இந்தப் படத்தின் சக  தயாரிப்பாளரான  அருண் பாலாஜிதான் இயக்குனர் சினிஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார், அவர் சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடித்தது.
 
அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நண்பரான  போஸ்டர் நந்தகுமார் ‘உனக்கு ஏன் தேவையில்லாத வேலை ?’ என்றார். ஆனாலும் ‘படத்தை நாங்க ஆரம்பிச்சிடுறோம், எங்களுக்கு உதவி தேவைப்படுறப்போ மட்டும் உதவி பண்ணுங்க’னு அவரை கேட்டுக்கிட்டேன்.
 
நந்தகுமாரும், தேனப்பனும் எங்களுக்கு நிறைய உதவி செய்தார்கள். நாங்கள் நினைத்த நிறைய விஷயங்கள் தவறிப் போனாலும், அதை விட நல்ல விஷயங்களே எங்களுக்கு கிடைத்தன”  என்றார் 
 
“இந்த படத்தில் நானும் ஒரு தயாரிப்பாளராக இருந்தேன். பின் ஒரு சில காரணங்களால் விலகி விட்டேன். நட்புக்காக என்ன வேணாலும் செய்வான் இயக்குனர் சினிஷ். மிகவும் தன்னம்பிக்கையான மனிதன்.
 
தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கக் கூடிய ஒரு இயக்குனர். அந்த எண்ணத்துக்காக இந்த படம் வெற்றி பெறணும்” என்றார் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.
 
“முதல் முறையாக ஒரே படத்தில் எல்லா பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். அதற்கு சினிஷ்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். முதல் பட இயக்குனருக்கு இவ்வளவு பெரிய படம் அமைவது பெரிய விஷயம்.
 
காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என ஒரு கலவையான படம். நிறைய கஷ்டங்களை தாண்டிதான் இந்த மொத்த படமும் முடிந்திருக்கிறது” என்றார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.
 
“இந்த படத்தில் எல்லோருக்கும் பேய் மேக்கப் போட்டு, யார் பேய்னு பார்க்கறவங்க எல்லோருமே கேட்கிறார்கள். உண்மையில் பேய் இயக்குனர் சினிஷ் தான். படத்தை கொண்டு போய் சேர்க்க, பேய் மாதிரி வேலை பார்த்தார் சினிஷ் “என்றார் எடிட்டர் ரூபன்.
 
“பலூன் என்னுடைய முதல் ஹாரர் படம். நிறைய படங்களில் முதலில்  பேசி விட்டு, பின்னர் பெரிய நாயகிகளை ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் சினிஷ் உறுதியாக எனக்கு தமிழ் பேசுற நாயகி தான் வேணும் என சொல்லி என்னை ஒப்பந்தம் செய்தார். நல்ல பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது” என்றார் நாயகி ஜனனி. 
 
“நான் இந்த படத்துக்குள் வர முக்கிய காரணம் சினிஷ்தான். போஸ்டர், டீசர்னு ஒவ்வொரு விஷயமும் நல்ல வரவேற்பை பெற்றது. பலூன் படத்துக்கு முந்தைய வாரம் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது.
 
ஆனாலும் எங்கள் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். ரிலீஸுக்கு முன்பே பலூன் படத்தின் எல்லா ஏரியாவும் விற்பனை ஆகி விட்டது” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ். “வேட்டை மன்னன் படத்தில் உதவியாளராக வேலை செய்தேன். பின் ஒரு குறும்படம் எடுத்து அதுவும் சொதப்ப, அடுத்து ஒரு கதையோடு தயாரிப்பாளரை தேடி அலைந்தேன். ஞானவேல்ராஜா ஒரு பேய் கதை வேணும்னு கேட்க 30, 40 ஆங்கில படங்களை பார்த்து, ஒரு கதை ரெடி பண்ணி விட்டேன்.
 
நான் காப்பியடித்த படங்களின் லிஸ்ட்டை டைட்டில் கார்டில் போடுவேன். பாதி கதை ரெடியான நேரத்தில் கதையை கேட்ட திலீப் சுப்பராயன் படத்துக்கு ஹீரோ, தயாரிப்பாளர்கள் கிடைக்க உதவியாய் இருந்தார். நிறைய பிரச்சினைகள் வந்தன, அதையும் தாண்டி படம் வளர்ந்தது.
 
எனக்கு  பாஸிடிவாக கூடவே இருந்தார் ஆரா சினிமாஸ் மகேஷ்.  நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அதற்கு நடிகர்கள், இயக்குனர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்,”என்றார் இயக்குனர் சினிஷ். 
 
டிசம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது பலூன் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *