சினிஷ் எழுதி இயக்கும் படம் பலூன் . ((கிரிஷ், சிரிஷ் என்று கேள்விப் பட்டு இருக்கோம் . இந்த இயக்குனர் பேர்லயே சினி(மா) வச்சிருக்கார் )).
இதற்கு முன்பு, என்றென்றும் என்ற சிறப்பான டெலிஃ பிலிம் மூலம் பலரையும் கவர்ந்தவர் சினிஷ் . அது திரையரங்கிலும் திரையிடப்பட்டது.
பலூன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு எடுத்த எடுப்பிலேயே ஏகப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது .
அட்டகாசமான லொக்கேஷன்கள், நல்ல ஷாட்கள், சரவணனின் சிறப்பான ஒளிப்பதிவு , யுவன் ஷங்கர் ராஜாவின் ஈர்க்கும் பின்னணி இசை என்று பலவித நேர்த்தியான அம்சங்களுடன்,
காதல், ஹாரர் , செண்டிமெண்ட், தெறிக்கும் ஆக்ஷன் என்று அசத்தலாக இருக்கிறது டீசர் .
டீசர் வெளியீட்டை ஒட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சினிஷ்
“ஒரு உதவி இயக்குனர் (ஜெய்)தனது முதல் படத்துக்கு கதை எழுத தன் இணையுடன் (அஞ்சலி) ஒரு மலைவாசஸ்தலம் போகிறார் . அங்கு அவருக்கு ஏற்படும் ஹாரர் உள்ளிட்ட பல அனுபவங்களே இந்தப் படம் .
சினிஷ்
பேய்ப்படம் என்றாலும் கதையில் வரும் விசயங்களை வித்தியாசமாக வைத்து , வழக்கமான பேய்ப் படமாக இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் .
படத்தில் ஜெய்க்கு இரண்டு வேட ங்கள் . ஒன்றில் ஜனனி அய்யர் ஜோடி . அது மிக சிறப்பான காதல் அனுபவமாக இருக்கும் .அஞ்சலி தொடர்பான காட்சிகளில் காதல் , ஹாரர் , செண்டிமெண்ட் எல்லாம் இருக்கும் .
படத்தின் ஹாரர் காட்சிகளில் எல்லாம் பலூனை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி உள்ளோம் .
பேய்ப்படங்கள் போலவே பலூனும் குழந்தைகளை கவரும் என்பதால் இந்த உத்தி . யோகி பாபு வரும் காட்சிகள் நகைச்சுவையில் சிறப்பாக இருக்கும். .
குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும் .
வரும் செப்டம்பர் மாத சமயத்தில் படம் திரைக்கு வரும் ” என்றார் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462