அன்பானவன் அசராதவன் அடங்காதவன் @ விமர்சனம்

anba 5
மதுரை தாதா  ஒருவனால் வளர்க்கப்படும் அனாதை மைக்கேல்,   வளர்ந்து பெரியவன் ஆனதும் (சிம்பு) தாதாவின்  முக்கிய பலமாக ‘மதுரை மைக்கேல்’ என்ற பெயரோடு வலம் வருகிறான் .

எப்போது  கரண்ட் சுவிட்சை  போட்டாலும் ஷாக் அடிக்கப்படும் ஒரு பிராமணரின் ( ஒய் ஜி மகேந்திரன் ) மகளான  செல்வியை ( ஸ்ரேயா ) , 

சாமி பல்லக்கை தூக்கிக்  கொண்டு வரும் மைக்கேல் தடவ , அவளுக்கு மைக்கேல் மீது காதல் வருகிறது . ஆச்சா?

காதல் வந்த பிறகு “ரவுடித்தனம் கொலை பண்றது  எல்லாம் வேணாம் . வா…. துபாய் போய் பொழைச்சுக்கலாம் ” என்கிறாள் செல்வி .

anba 2

விஷயம் அறிந்த தாதா “கடைசியாக எனக்காக ஒரு கொலை செய்து விட்டுப் போயிடு ” என்கிறார் .

அப்புறம்தான் நீங்களே சொல்வீங்களே .. எஸ் ! கொலை செய்த மைக்கேல் மாட்டிக் கொள்கிறான் . ஜெயிலுக்குப் போகிறான்.

ஜெயிலில் இருந்து தப்பிக்கும் மைக்கேல் ‘செல்வியாவது நல்ல வாழ்க்கை வாழட்டும் என்று காதலைத் துறக்கிறான் . துபாய் போகிறான் . பெரிய தாதா ஆகிறான்.

அஸ்வின் என்று பெயர் மாற்றிக் கொள்கிறான் . வயசும் ஆகி விடுகிறது அவனை துபாய் போலீஸ் அதிகாரி தேடுகிறார்

ஆனால்  அஸ்வின்  தமிழ் நாட்டுக்கு வந்து…. இதுக்கு மேல கதையை யாராலும் யூகிக்க முடியாது .  பின்னே? இவ்வளவு கேவலமான கதை எல்லாருக்கும் தோன்றுமா என்ன?

anba 4

தமிழ் நாட்டுக்கு வந்து ஒரு இளம்பெண்ணை (தமன்னா) காதலிக்கிறான் . அவளும் இவனை காதலிக்கிற  மாதிரியே நடந்து கொள்கிறாள் . டூயட் எல்லாம் பாடுகிறார்கள் .

திடீர் என ஒரு நாள் அவள் தன்  காதலன் என்று தன்னை விட இரண்டு வயசு குறைவான ஒருவனை (இன்னொரு சிம்பு) அறிமுகப் படுத்துகிறாள் .

கடுப்பான தாத்தா மனம் நொந்து பீச்சுக்கு வந்து நிற்கிறார் . அங்கே சொண்டிச் சோறு திங்கிற  ஒருவன் (ஜி வி பிரகாஷ்) நிற்கிறான் . இருவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள் .

தாத்தாவான தன்னை காதலிக்காமல் , வேறு ஒருவனை காதலிக்கும் பெண்ணை பழிவாங்க தாத்தாவும் சொண்டிச் சோறு ஆளும் முடிவு பண்ணி சபதம் எடுக்கிறார்கள் .

anba 1

இரண்டாம் பாகத்தில் தொடரும் என்று போட்டு மண்டை காய வைத்து அனுப்புகிறார்கள் .

எந்த கருமத்தைச்  சொல்ல? எந்த கண்றாவியை சொல்லாமல் விட? ஆரம்பம் முதலே அக்கப்போர்தான் .

சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிப்பவர்கள் முதற்கொண்டு எல்லாருமே செயற்கையாக நடிக்கிறார்கள்

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் கடைசி காலத்தில் தாடியோடு இருந்தாரே? அந்த கெட்டப்பை தாதா கேரக்டருக்கு கொடுத்து இருக்கிறார்கள் . சிவாஜி மேல் என்ன கோபம் சிம்பு அன் கோ வுக்கு ?

சிவாஜிக்கு இது ஒரு கேவலம்  என்றால் அந்த தாதா முகத்தில் நடிப்பே வரவில்லை . அது சிவாஜிக்கு  இழைக்கப்படும் இன்னொரு அவமானம் .

வெளிநாட்டில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி என்றால் நம்ம ஊரு அதிகாரி என்றாலும்  கிளிவேஜ் கிழிஞ்சு தொங்கற மாதிரிதான் ட்ரெஸ் போடணுமா ?

anba 3
இதில் ”நான் தமிழச்சிடா” என்ற வசனம் வேற . கர்மம் கர்மம் !

ஷாக் வாய்ப்பு மனிதர் என்பது ஒரு உண்மையான கதாபாத்திரம்தான் .

ஆனால்  ஒவ்வொரு முறை ஷாக் அடிக்கும் போதும் ஒய் ஜி மகேந்திரன் வாயில் யாரவது வாயை வைத்து உறிஞ்சுவதாக காட்சி  வைத்து இருப்பது … உவ்வே !

நாடக உலகில் மாபெரும் சாதனைகள் செய்யும் ஒய் ஜி மகேந்திரன் போன்றவர்கள் இது போன்ற கேவலமான கேரக்டர்களில் நடிக்க வேண்டுமா ? வீட்ல என்ன சோத்துக்கா  பஞ்சம் ?

இரட்டை அர்த்த வசனம் கூட இல்லை . நேரடியாக கேவலமான கீழ்த்தரமான வசனங்கள் !

anba 6

இந்தப் படத்தை எழுதி இயக்கியவரின் அம்மா அக்கா தங்கைகள் இந்தப் படத்தை எப்படி பார்ப்பார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் .

குழம்பு வைப்பது எப்படி என்ற காட்சி வைத்து அதில் புளி  என்ற வார்த்தை வந்தால்  கூட ,

”புளி என்ற சத்தம் புலி  என்ற வார்த்தை மாதிரி இருக்கு . அது விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வசனம்” என்று சொல்லி, அதை நீக்கி டெல்லிக்கு சொம்படிக்கும் சென்சார் போர்டு செங்கமட்டிகள் ,

இது போன்ற கேவலமான வசனத்தை எல்லாம் அனுமதிப்பதைப்  பார்க்கும்போது , நல்லா பிஞ்சு போன நமது பழைய பீச்சங்கால் செர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருப்பை எடுத்து ….

நம்மையே அடித்துக் கொள்ளணும் போல இருக்கு .

anba 7

வயசான சிம்புவுக்கு ஒரு கெட்டப்பும் மேக்கப்பும் போட்டு இருக்காங்க….

கிராமத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் மைதா மாவை கரைத்து முகத்தில் போடும் எளிய கலைஞர்களின் வயசான மேக்கப் கூட இன்னும் நல்லா இருக்கும் .

மார்பகம் வரும் பகுதிக்கு நேராக eye contact என்ற வசனம் எழுதப்பட்ட பனியனை தமன்னாவுக்கு போடத் தெரிந்தவர்களுக்கு ,

படம் பார்க்க வரும் ரசிகனோடும் கம்பீரத்தோடும் கண்ணியத்தோடும் எப்படி சினிமா மூலம் ரசனை காண்டாக்ட் செய்து கொள்வது என்பது புரியாதது கொடுமை .

சண்டைக் காட்சிகள்  அருமை . ஆரம்பிக்க காட்சிகளில் மதுரை வழக்குத் தமிழ் பேசும் சில நிஜமான மனிதர்கள் கவர்கிறார்கள் .

anba 8

” நாங்க மட்டன் , சிக்கன் எல்லாம் சாப்பிட மாட்டோம் ?”

“ஏம்மா … நீங்க சைவமா ?”

”ம்ஹும் . நாங்க  PETA “

போடீங்க…வீ  ஃ பார் ஜல்லிக்கட்டு ” என்ற காட்சி மட்டும் அசத்தல் என்றால் ,

அதில் நடிக்கும் நடிகையைக்  கூட,

ஜல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் தமிழ்ப் பெண்களை இழிவு படுத்திப் பேசிய ராதா தியாகராஜன் மாதிரியே போட்டு நடிக்க வைத்திருக்கும் அந்த கெத்துக்கு  மட்டும், 

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் , சிம்பு இருவருக்கும் பாராட்டுக்கள் .
anba 9
ஆனாலும் கூட ,

 அன்பானவன் , அசாராதவன், அடங்காதவன் …. அபத்தமானவன், அல்பமானவன் அசிங்கமானவன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *