APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்க, நாயகியாக மேகனா நடிக்க,
காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் உடன் நடிக்க,
இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அய்யனார் எழுதி இயக்கி இருக்கும் படம் ” உறுதி கொள்”
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட முன்னோட்டம் பள்ளி கல்லூரிக் காதல் பகை பழி இவற்றை சொன்னது
அறிமுக இசையமைப்பாளர் ஜூட் லின்னெகர் இசையில் மணி அமுதவன் எழுதிய பாடல்கள் இனிமையாக இருந்தன . நான் சிவன் என்ற பாடல் இன்னும் ஒரு படி மேல்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஆரி “கமல்ஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி,
அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்” என்று கூற ,
அடுத்துப் பேச வந்த சக சிறப்பு விருந்தினர் மன்சூர் அலிகான்” தியேட்டரில்ப டம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை.
சினிமாக்காரர்கள்தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு ,
அந்த டி.வி காரங்க ஏதோ உப்பு புளி மொளகா வாங்கற அளவுக்கு படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.
ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்கக் காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட்.
அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.
நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்.” என்றார்
படம் பற்றிப் பேசிய இயக்குனர் ஆர் . அய்யனார் ” பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.
சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சிதானே தவிர அது காதல் இல்லை.
காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதுதான் படத்தின் கதை.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள்.
இதை காதல் மோதல் செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம்.
விரைவில் படம் வெளியாக உள்ளது “என்றார்
வெற்றிக்கு ‘உறுதி கொள்’ளுங்கள் !