பிளட் மணி (blood money ) @ விமர்சனம்

Emperor Entertainment சார்பில் இர்ஃபான் மாலிக் தயாரிக்க ,
 
பிரியா பவானி சங்கர் , சிரிஷ், கிஷோர் , ஸ்ரீலேகா ராஜேந்திரன் நடிப்பில் சர்ஜுன் இயக்கி இருக்கும் zee 5  தளத்தின் ஓ டி டி ஒரிஜினல் படம் பிளட் மணி (blood money ). 
 
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன் ( கிஷோர்) தம்பி இருவர் அரபு தேசத்துக்கு வேலைக்குப் போகிறார்கள். அங்கே உடன் பணி புரியும் இலங்கை இஸ்லாமிய தமிழ்ப் பெண் ஒருவரின் மரணத்துக்குக் காரணமானதாக கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் .
 
அண்ணனின் மனைவி இறந்து விட்ட நிலையில்  மகளான சிறுமி , மேற்படி சகோதரர்களின் தாய் மற்றும் தந்தை  ஆகியோர் அந்த அண்ணன் தம்பிகளின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவர்களுக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படுகிறது . 
 
துடிதுடித்துப் போன அந்தக் குடும்பம் கலெக்டரின் உதவியை நாட, கலெக்டரின் உதவியாளர் ஒருவர் அந்தக் குடும்பத்தின் நிலையை யூ டியூப் வீடியோவாக்கி இணையத்தில் பரப்புகிறார் . 
 
தொலைகாட்சிச் சேனல் ஒன்றில் புதிதாகப் பணியில் சேர்ந்து முன்பே இருப்பவர்களின் பொறாமைக்கு ஆளாகும் ஓர் இளம் பெண் பத்திரிகையாளர் (பிரியா பவானி சங்கர்) இந்த விஷயத்தை செய்தியாக்குவதொடு , அண்ணன் தம்பிகளின் விடுதலைக்கும் முயல்கிறார் . 
 
தூக்குக்கு ஒரு நாள் கூட இல்லாத நிலையில்….  சீனியர் பத்திரிகையாளர்கள், சூழல், அரசியல் நெருக்கடி , நாடுகளின் சட்ட திட்டங்கள் இவற்றை மீறி அந்த பத்திரிக்கையாளரால் அண்ணன் தம்பிகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா? ஆம் எனில் எப்படி ? இல்லை எனில் ஏன் ?என்பதே இந்த பிளட் மணி . 
 
அரபு தேசங்களில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு தேவையான நிவாரணத்தை கொலை செய்தவர் கொடுத்து விட்டால் அதனடிப்படையில் குற்றவாளியை கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் மன்னித்து விட்டால், கொலை செய்தவர் விடுதலை செய்யப்படுவார் .(பணம்  பெற்றுக் கொண்டு மன்னிக்க மறுக்கவும் உரிமை உண்டு . அப்போது குற்றவாளியை விடுவிக்க மாட்டார்கள் ) இதற்கு பிளட் மணி (blood money ) என்று பெயர் . அதுவே படத்தின் பெயராக !
 
இதுவரை தமிழில் சொல்லப் படாத பரபரப்பும்  விறுவிறுப்புமான திருப்பங்கள் கொண்ட கதை. கதை. இதுதான் படத்தின் முதல் பலம் 
 
பத்திரிகையாளர் நபீல் அகமதுவின் இந்தக் கதைக்கு  அடுத்தடுத்து  கடுமையான சவால்களைச் சொல்லும் காட்சிகள், பொருத்தமான வசனங்கள்  கொண்ட சங்கர்தாசின் திரைக்கதை வசனம் அமைய , 
 
அவற்றுக்கு மகுடமாக  இயக்குனர் சர்ஜுனின் பிரம்மாதமான படமாக்கல் மற்றும் இயக்கத்தில் மிகச் சிறப்பாக வந்திருகிறது பிளட் மணி (blood money ). 
 
இயக்குனர் சர்ஜுன்

அரபு தேச சிறையில் தவிக்கும் அண்ணன் தம்பிகள் சம்மந்தப்பட்ட காட்சியில் துவங்கும் படம் நூல் பிடித்தது போல , அவர்களின் குடும்பம், குமுறல் ,  தொலைக்காட்சி நபர்கள் பிரச்னை என்று பாய்ந்து பரவி விரவி தாவி மேவுகிறது 

 
 படத்தில் தேவை இல்லாத காட்சி என்று ஒரு காட்சி கூட இல்லை என்ற அளவுக்கு சர்ஜுனின் இயக்கம் ஆளுமையோடு அமைந்திருக்கிறது. 
 
அஜர் பைஜானில் எடுக்கப்பட்டிருக்கும் அரபு தேசக் காட்சிகள், தனுஷ்கோடியில் எடுக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கின்றன . .
 
ஜி பால முருகனின் ஒளிப்பதிவு சூழலை மிக சிறப்பாக  வெளிப்படுத்த துணை நிற்பதோடு நம்பகத்தன்மைக்கும் உதவுகிறது . சூர்யா ராஜீவனின் கலை இயக்கமும் அப்படியே . 
 
சதீஷ் ரகு நந்தன் இசை உணர்வுக் கூட்டலுக்குத் துணை நிற்கிறது . செண்டிமெண்ட் காட்சிகளில் இன்னும் ஒருபடி மேலே போகிறது 
 
கதை திரைக்கதைக்கு ஈடு கொடுத்து படத்தை பரபரவென பறக்க விடுவதில் ஜிகே பிரசன்னாவின் படத் தொகுப்புக்கும் பெரும்பங்கு . 
 
தரமான தயாரிப்பால் படத்தை மிக சிறப்பாக வடித்துள்ளார்  Emperor Entertainment  இர்ஃபான் மாலிக் . 
 
தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்

படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான பெண் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில்சரியாகப்  பொருந்தி,  ரசிக்கும்படி  நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர் .

 
அவருக்கும் துணை நிற்கும் நண்பனாக சிரிஷ், சிறையில் வாடும் கைதியாக கிஷோர் , கைதிகளின் தாயாக ஸ்ரீலேகா , மகளாக நடித்திருக்கும் சிறுமி ஆகியோர் மிக மிக சிறப்பாக நடித்துள்ளனர் . இவர்களை  எல்லாம் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சர்ஜுன் . 
 
 
மொத்தத்தில் பிளட் மணி (blood money ) .. .
 
zee 5  ஓ டி டி தளத்துக்கு ஒரு வெற்றிகரமான ஒரிஜினல் பார்சல்ல்ல்ல்…… !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *