தூநேரி @ விமர்சனம்

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் சார்பில் சுனில் டிக்ஸன்  தயாரித்து இயக்க,  நிவின் கார்த்திக் , ஜான் விஜய் , மியாஸ்ரீ நடிப்பில் கலையரசன் இசையில் கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் படம் . 

ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர் தூனேரி. அந்த ஊரில் நடக்கும் கதை . இவர்கள் தூநேரி என்று  பெயர் வைத்துள்ளனர் . 

சென்னையில் பணி புரியும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய மகளின் பள்ளித் தோழியான சிறுமி ஒருத்தி, தனது சிற்றன்னையால் ( அப்பாவின் இரண்டாம் மனைவி) கொடுமைப் படுத்தப்படுகிறாள் . 

இதை அறிந்த போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பாவிடம் சொல்ல, அந்த சிற்றன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து  கலாட்டா செய்து விட்டுப் போகிறாள். 

இந்த நிலையில் அதிகாரிக்கு ஊட்டி அருகில் உள்ள தூனேரி என்ற ஊருக்கு மாற்றல் ஆகிறது . மனைவி மகள் மகனுடன் தூனேரிக்கு வரும் அதிகாரி கல்லறை பக்கத்தில் உள்ள வீட்டில் தங்குகிறார் . 

அந்த ஊரில் காவல்காரனாக இருந்து பின்னர் மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு , ஒரு நிலையில் கொல்லப்பட்ட கருப்பசாமி என்பவன் துர் ஆன்மாவாக உலவி வருவதாக ஊர் நம்புகிறது . 

ஊர் மக்களால் வளர்க்கப்படும் – கருப்பசாமியின் மகன் போலீஸ் அதிகாரியின் பிள்ளைகளுக்கு நண்பன் ஆகிறான் . 

போலீஸ் அதிகாரி தங்கி இருக்கும்  வீட்டில் ஏதோ ஒரு பேய்  தனது வேலையை ஆரம்பிக்கிறது. ஒரு நிலையில் அது போலீஸ் அதிகாரியின் மனைவியையும் பிடிக்கிறது . 

யார் அந்த பேய் , அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த தூநேரி. 

வித்தியாசமான பெயர்.

படம் துவங்கிய ஓரிரு காட்சிகளுகுள்ளேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதை. 

பிறகு தூநேரிக்கு வந்து கருப்பசாமியின் கதை சொல்லும்போது பரபரப்பு இன்னும் ஏறுகிறது .

அட்டகாசமான லொக்கேஷன், அழகிய காடுகள், அமானுஷ்ய மர்மம் என்று பின்புலம் சிறப்பாக இருக்கிறது. ஏரியல் ஷாட்களில் ஒளிப்பதிவு ஓஹோ. 

குழந்தைகளை வைத்து பேய் திரில்லர் என்று முயன்று இருக்கிறார்கள் . சென்னைச் சம்பவங்களை தூநேரியோடு இணைத்த விதம் சிறப்பு 

வரைகலை காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .

நாயகன்  , நாயகி பொருத்தம் . வில்லி மிரட்டுகிறார் . கருப்பசாமியாக ஜான் விஜய் ஈர்க்கிறார். 

இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை குழம்புகிறது . அது மட்டும் சரியாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *